பசுந்திரா சசி (இயற்பெயர்: செட்டியூர் ப.சசிகரன்). லண்டன்: இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகம், இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகம், 1வது பதிப்பு, 2015. (வவுனியா: வாணி கணினிப் பதிப்பகம், இல. 85, கந்தசாமி கோவில் வீதி).
210 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 300., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-7938-02-08.
தபால் நிலா, மத்தள உரல், சின்னப்பொடி, ஆழநட்ட வாழை, சமயோசித சஞ்சாரம், வெண்நிலவுகள், ஓருயிர் ஈருடல், ஆகாய குஞ்சுகள், செவ்வந்திச் சுவடு, புத்திரபாக்கியமும் புரிந்துணர்வும், இரவல் திருமணம், குயில், ஆகவே புலன் ஆகாது ஆகிய பன்னிரு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. புதுமையான விடயங்களை வாசகருக்கு வழங்கவேண்டும்; என்பதில் அக்கறைகொண்ட செட்டியூர் ப.சசிகரன், மாறுபட்ட சூழலில் வேறுபட்ட கதைமாந்தர்களை முன்னிறுத்தி அக்கதை மாந்தர்களின் வாழ்க்கைக் கோலங்களைக் காட்டியுள்ளார். கதைகளின் கருப்பொருள்களாக இடப்பெயர்வின் அவலங்கள், அகதி முகாம் வாழ்க்கை, இடர்ப்பாடுகள், வறுமையின் கோலங்கள் போன்றவை அமைந்துள்ளன. செட்டிகுளத்தைச் சேர்ந்த சசிகரன் தற்போது புலம்பெயர்ந்து லண்டனில் வாழ்ந்து வருகிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61275).