ம.பா.மகாலிங்கசிவம். தெல்லிப்பழை: கலை இலக்கியக் கள வெளியீடு, 1வது பதிப்பு, புரட்டாதி 2015. (இணுவில்: வைரஸ் பிரின்டர்ஸ்).
xviii, 90 பக்கம், சிததிரங்கள், விலை: ரூபா 200., அளவு: 20×14.5 சமீ.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழில் சிறப்புப் பட்டமும் முதுமாணிப் பட்டமும் பெற்ற ம.பா.மகாலிங்கசிவம் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் விரிவுரையாளராகப் பணியாற்றிவருகிறார். நாடறிந்த பத்திரிகையாசிரியர் புலவர் ம.பார்வதிநாதசிவம் இவரது தந்தையாராவார். ம.பா.மகாலிங்கசிவம் ‘தமிழருவி’ என்ற சஞ்சிகையில் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இத்தொகுப்பில் ஆசிரியரின் விசுவாமித்திரன், புகையிரதம் மீண்டும் வரும், புதை மணல், சிக்குன் குனியா, (அ)தர்மம், நினைவுக் குமிழிகள், ஏன்?, தூதுவன், சாணக்கியம், நீர்க்குமிழி, மூடநாரையும் கீரிப்பிள்ளையும், கானல், அபெயர்ஷேயம் ஆகிய 13 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலான சிறுகதைகள் பாடசாலைகளை மையப்படுத்தி எழுதப்பட்டவை.