செ.குணரத்தினம். மட்டக்களப்பு: செ.குணரத்தினம், அமிர்தகழி, 1வது பதிப்பு, 2015. (மட்டக்களப்பு: எவர்கிறீன் அச்சகம்).
xi, 106 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4320-31-4.
மட்டக்களப்புப் பிரதேச மக்களின் வாழ்வியலைப் பதிவுசெய்யும் சிறுகதைத் தொகுப்பு. ஆசிரியரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இதுவாகும். அன்றாட வாழ்வின் சிக்கல்களுக்குள்ளாகும் தருணங்களை மட்டக்களப்புப் பேச்சு வழக்கிலேயே அழகாகச் சித்திரித்துள்ளார். 1957இல் மட்டக்களப்பைப் புரட்டிப்போட்ட வெள்ள அநர்த்தத்தை நினைவூட்டுவதாக ஆற்றுவாய் என்ற கதை அமைகின்றது. இத்தொகுப்பில் யாதும் ஊரே (வீரகேசரி-2008), நினைவை விட்டகலாத நிஜங்கள் (வீரகேசரி-2010), கலா பல்கலைக்கழகம் போகிறாள் (வீரகேசரி-2010), ஒரு எழுத்தாளனின் இறுதி ஆசை (தினகரன்-2010), ஆனந்தக் கண்ணீர் (வீரகேசரி-2011), பொன்னாடை (தினகரன்-2011), கனவு மெய்ப்படல் வேண்டும் (வீரகேசரி-2012), உதயத்தைக் காணாத இதயங்கள் (தினகரன்-2012), பூபாலி (வீரகேசரி-2012), பழிக்குப் பழி (வானவில்-2012), பிறந்த மண் (சுடர் ஒளி- 2013), ஞானம் (வீரகேசரி-2015), ஆற்றுவாய் (வீரகேசரி-2015) ஆகிய 13 கதைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் யாதும் ஊரே என்ற கதை யாழ். இலக்கிய வட்டத்தின் பரிசையும், உதயத்தைக் காணாத இதயங்கள் இலங்கையர்கான் நினைவுப் போட்டிப் பரிசினையும் வென்றவையாகும்.