பொ.கனகசபாபதி. கனடா: பொ.கனகசபாபதி, ரொரன்டோ, 1வது பதிப்பு. செப்டெம்பர் 2012. (கனடா: ஜே.ஜே.பிரின்டிங், ஸ்காபரோ, ஒன்ராரியோ).
252 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ.
கனடா ‘தாய்வீடு’ பத்திரிகையில் ஆசிரியர் எழுதிய 25 கதைகளின்; தொகுப்பு இது. கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் மரமும் மனிதரும் பிராணிகளுமாகின்றன. அவற்றின் பின்புலத்தில் இடம்பெறும் சம்பவங்களே கதைகளை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கின்றன. அனைத்துக் கதைகளும் ஆசிரியரின் சொந்த அனுபவத்தின் வெளிப்பாடுகளாகவே அமைந்துவிடுகின்றன. சம்பவங்களை விளக்கும் போது கையாளப்படும் எழுத்து நடை, இலக்கிய எடுத்துக்காட்டுகள், விஞ்ஞான விளக்கங்கள் என்பன சில சமயம் இவை கட்டுரைகளின் வரம்பைத் தொட்டுச் செல்வதாகவும் தோற்றமளிக்கின்றன. இதிலுள்ள கதைகளிற் சில தீராநதி, தினக்குரல் அகிய ஊடகங்களிலும் மீள்பிரசுரமாயின. கமுகு மரம், வாழை, கொல்லைப்பறத்துப் பலா, குப்பையடிக் கறுத்தக் கொழும்பான், தோப்புப் பனைமரம், வேலியடி வேப்பமரம், வீட்டுக் கோடியில் கறிமுருங்கை, கிணற்றடி வேலியில் செம்பருத்திப் பூ, ஊஞ்சல் ஆடிய புளியமரம், கோடியில் கறிவேப்பிலை மரம், வரிசையாய் தென்னைமரம், இலுப்பைப்பூ, விளாத்தி மரம், வேலிப் பூவரசு, கோடி மூலையில் நாவல்மரம், மாதுளம் செடிகள், அடிவளவு அன்னமுன்னா, நெல்லிமரம், கிணற்றடி ஈரப்பலா, வறைக்குதவும் அகத்தி இலை, அம்மாவின் அரிக்கன் ஆடு, மைத்துனன் வீட்டு எலி என இக்கதைகளின் பின்னணி ஏதோவொரு வகையில் ஒரு தாவரத்தையோ பிராணியையோ சார்ந்ததாக அமைக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 57746).