ஆதிலட்சுமி சிவகுமார். கிளிநொச்சி: கப்டன் வானதி வெளியீட்டகம், இல.61, கனகபுரம், 1வது பதிப்பு, தை 2006. (வவுனியா: மல்ரிவிஷன் அச்சுக் கலையகம், 2ம் குறுக்குத்தெரு).
xii, 235 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 250., அளவு: 21×13.5 சமீ.
தினகரன் பத்திரிகையில் உரிமையில்லா உறவுகள் என்ற சிறுகதையுடன் எழுத்துலகப் பிரவேசம் செய்த ஆதிலட்சுமி சிறுகதைத்துறையில் மாத்திரமன்றி பிற ஆக்க இலக்கியத்துறைகளிலும் ஆழக்கால் பதித்துநிற்பவர். போரையும் சமூகத்தின் அவல வாழ்வையும் பட்டுணர்ந்து அதன் பிரதிபலிப்பாக உள்ளத்தில் பதிந்த உயிர்த்துடிப்புள்ள 31 கதைகளைத் தொகுத்து இத்தொகுதியை வெளியிட்டுள்ளார். புயலை எதிர்க்கும் பூக்கள், என் கவிதை ஆகியவற்றுக்கு அடுத்ததாக இவரது மூன்றாவது நூல் இதுவாகும். கப்டன் வானதி வெளியீட்டு வரிசையில் எட்டாவது நூல் இது. இதில் புதிய முளைகள், மனிதம், நியதிகள் மாறும், அவளின் பிள்ளைகள், மண், வெற்றுக் குரல், இப்படியும், எழுகை, இப்போது அது வெறும் சடம், இலவம் பஞ்சுகள், நிலா, தணலில் விழுகின்ற தளிர், வெள்ளைத் துணி, மனிதர்கள், அவள் வகுத்த வழி, முரண்கள், இயல்புநிலை திரும்பாதவர்கள், வீடுகள், சமாதானத்தின் வலி, வேரின் கரம், துடுப்பில்லாத ஓடங்கள், புதிய ஊரின் பழைய மனிதன், வெகுமதி, அகதி, ஒரு புரிதலின் பின், பிரச்சினை இல்லாதவர்களின் பிரச்சினைகள், புதிய மனுஷி, உயிருள்ள சாட்சியங்கள், உதிராத சருகுகள், அப்பா, அகதியின் பயணம் ஆகிய தலைப்புகளில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன.