கிறிஸ்டி முருகுப்பிள்ளை. திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், இல. 37/7, மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு, ஜனவரி 2012. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.14 டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
xii, 78 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-53372-9-8.
மட்டக்களப்பு மாவட்டத்தில் எருவில் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் நூலாசிரியர். விஞ்ஞான கணித ஆசிரியராகப் பணியை ஆரம்பித்த இவர் பாடசாலை அதிபராகிப் பின்னர் கல்விப்பணிப்பாளராகப் பணியாற்றியவர். மூன்று தசாப்தங்களாக எழுதிவரும் இவரது முதலாவது கதைத் தொகுதி இதுவாகும். தொண்டன் இதழில் வெளிவந்த பதினொரு கதைகளையும், பிற ஊடகங்களில் வெளிவந்த மூன்று கதைகளையும் பிரசுரமாகாத ஒரு கதையையும் சேர்த்து மொத்தம் 15 கதைகளை இத்தொகுப்பில் இணைத்துள்ளார். தலைப்புக்கதை உளவள ஆலோசகரின் முயற்சியும் உதவும் மனப்பான்மையும் பாதிக்கப்பட்ட ஒருவரை எப்படி சமூகத்தில் மீள இணைக்க உதவுகின்றது என்பதை காட்டுகின்றது. உணர்வுகளும் உறவுகளும், ஒரு கல்லும் ஓர் உளியும், உண்மையைத் தேடி, வலிக்கும் இரணங்கள், அந்தப் பணமும் இந்த மனமும், விசுவாசம், கறுத்த உடல்களும் வெளுத்த உள்ளங்களும், உண்மையின் ஒளி, ஊமை உறவுகள், துரோகச் சுமை, சமாந்தரங்கள் சந்திக்கின்றன, அப்பா வருவாரா, இறைவன் இணைத்ததை, துஆக்களும் பிரார்த்தனைகளும், மீண்டு(ம்) எழுவோம் ஆகிய தலைப்புகளில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன.