சிவனு மனோஹரன். ஹட்டன்: பெருவிரல் கலை இலக்கிய இயக்கம், 1வது பதிப்பு, மே 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை).
140 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-43390-0-2.
இந்நூலில் அமராவதியின் ஆறாம் பிரசவம், மீன்களைத் தின்ற ஆறு, மட்டக்குச்சி, மண், அழுக்கு, தாராவின் சப்பாத்து, ஜென்சியும் ஜேசுமணி சித்தப்பாவும், காமன் பொட்டல், கோகிலாவும் கோணல் வகிடும், பொட்டு, கொழும்புத் தம்பி, வகுப்பறைக் காவியங்கள் ஆகிய 12 சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன. முன்னைய சிறுகதைத் தொகுப்புகளைவிட முன்னேற்றகரமாக மொழிநடையிலும்;, கதைசொல்லும் திறனிலும், கதைகளம், கரு என பலவற்றில் நவீன சிறுகதை தளத்தில் நின்று சிந்திக்கவும் இயங்கவும் முயன்றிருக்கும் ‘மீன்களைத் தின்ற ஆறு” சிறுகதை தொகுப்புக்கு ‘கொடகே விருது’ கிடைத்தமை குறிப்பிடத்தக்கது. விளிம்பு நிலை மாந்தரின் விழுமியங்களை சித்திரிக்கும்; சிறுகதைகள் இவை. சமூகம் பற்றிய பிரக்ஞையும் மானுடம் மேன்மையுறவேண்டும் என்ற உணர்வும் கொண்ட படைப்புக்களாக சிவனு மனோஹரனின் எழுத்துக்கள் மிளிர்கின்றன. இவை சமுதாய மாற்றத்துக்கு வேண்டிய வலிமையான இயக்க உணர்வை வாசகர் மனதில் ஏற்படுத்துகின்றன.