திக்குவல்லை கமால். கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2010. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).
144 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-30-2816-7.
திக்குவல்லை கமால் எழுதிய 17 சிறுகதைகளின் தொகுப்பு. பயணத்தின் ஆரம்பம், ஒரு குடும்பத்தின் கதை, மின்சாரக் கனவு, சந்தைக்கு வராத பண்டங்கள், வாரம் ஒரு வலம், இப்படியும் ஒரு, தவறி விழுந்த வார்த்தைகள், பிள்ளைச் செல்வம், புயலுக்குள் ஒரு பூந்தென்றல், காணாமல் போன கடாய், மனச்சுமை, சீனிக்கோவை, அகதிக்குட்டி, முட்டைக் கோப்பி, மக்கத்து மாமி, பள்ளிவாசலும் பத்து ரூபாவும், அயல்வீடுகள் ஆகிய 17 கதைகள் இத்தொகுதிக்காகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. தென்னிலங்கையைச் சேர்ந்த திக்குவல்லை கமால ஈழத்து தமிழ் ஆக்க இலக்கியத்துறையில் குறிப்பிட்டு சொல்லக் கூடிய ஒருவர். தென்னிலங்கை முஸ்லிம்களின் வாழ்வியலை ஈழத்து இலக்கியப் பரப்பில் கொண்டு வந்த படைப்பாளிகளில் கவனத்திற்குரியவர். பல் வகையான சிங்கள இலக்கியப் படைப்புக்களை தமிழுக்கு கொண்டு வருவதில் தீவிரமாக இயங்கி கொண்டு வருபவர். முற்போக்கு இலக்கிய இயக்கத்துடன் செயற்படுபவர். இவர் மொழிபெயர்ப்பு நூல்களுக்கு பலமுறை சாகித்திய விருதுகளைப் பெற்றுக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.