எம்.எச்.எம்.ஷம்ஸ். கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2014. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).
xxvi, 27-120 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-30-5118-9.
அமரர் எம்.எச்.எம்.ஷம்ஸ் அவர்களின் மறைவின் பின்னர் அவரது மகன் வெலிகம எம்.எஸ்.பாஹிம் அவர்கள் தனது தந்தையினால் வெளியிடத் தயாராக வைக்கப்பட்டிருந்த இந்நூலை வெளியிட்டுள்ளார். இத்தொகுப்பில் எம்.எச்.எம். ஷம்ஸின் கதைகள் பற்றிய எம்.ஏ. நுஃமானின் முன்னுரையுடன் 15 கதைகள் இடம்பெற்றுள்ளன. கருத்தைக் கவர்ந்த கானம், ரெண்டாம் ஷோ, திருப்பு முனை, வளவையின் மடியில், வயிறுகள், விடுதலை, கிராமத்திலே ஒரு சுவர் சாய்கிறது, யூனிவர்சிட்டி போய்ஸ், களனியும் கல்லோயாவும் கலக்கின்ற போது, நிஹாறா நீ தனித்தவளல்ல, நிய்யத்து, நம்பிக்கைகள், சுமைகள், மனிதன் அல்லாத காரணத்தால், இரவில் விழுந்த கிணற்றில் பகலிலுமா? ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 199538).