வி.ஜீவகுமாரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஏப்ரல் 2015. (நெல்லியடி: பரணி அச்சகம்).
xiv, 130 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 300., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-4676-24-4.
ஜீவநதி சஞ்சிகையில் ஜீவகுமாரன் எழுதிய 10 சிறுகதைகளின் தொகுப்பு இது. புலம்பெயர்ந்து 29 வருடங்களாக டென்மார்க்கில் வாழும் எழுத்தாளர் ஜீவகுமாரன் தான் வாழும் சூழலில் தன்னைப் பாதித்த விடயங்களைச் சிறுகதைகளாக்கித் தந்துள்ளார். உள்நாட்டு யுத்தம் காரணமாக உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு புலம்பெயர் நாடுகளுக்குச் சென்று அகதி அந்தஸ்துப் பெற்று வாழும் எம்மவர்களின் நிலை பற்றி அவர்களின் வாழ்வியல் கோலங்கள் பற்றி அவர்கள் எதிர்கொள்ளும் பண்பாட்டுக் கோல மாற்றங்கள் பற்றி அனேகமான கதைகள் பேசுகின்றன. இக்கதைகள் யாவும் மிகவும் எளிய இலகுவான மொழியில் வாசகனைத் தொட்டிழுக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளன. பாத்திர வார்ப்பும் கதைகளை நகர்த்திச் செல்லும் விதமும் ஜீவகுமாரனின் எழுத்துக்களின் தனித்துவம் எனலாம். இன்றைய தமிழ் எழுத்தாளர்களில் முன்னணி வகிக்கும் ஒருவராக வைத்துப் பேசப்படுவதை ஜீவகுமாரனின் இத்தொகுப்பிலுள்ள கதைகளும், ப.விஷ்ணுவர்த்தினியின் சிறப்பான அணிந்துரையும் உறுதிசெய்கின்றன.