ஏ.வீ.சுரவீர (சிங்கள மூலம்), ஏ.சீ.எம்.ராஸீக், ஸமீனா ஸஹீட் (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 1998. (கொழும்பு 13: பசிபிக் பிரஸ், 267, ஆட்டுப்பட்டித் தெரு).
61 பக்கம், விலை: ரூபா 75., அளவு: 18.5×12.5 சமீ., ISBN: 955-20-2518-4.
இது இலங்கை வரலாற்றின் பிரபல நிகழ்வான துட்டகைமுனு-எல்லாளன் யுத்தத்தின் பின்னணியில் அமைந்ததொரு சிறுகதையாகும். 1984இல் வெளியான பவதிமிர என்ற சிறுகதைத் தொகுப்பில் இது ‘மினிஸ்கம ஹா ரஜகம’ என்ற தலைப்பில் ஒரு சிறு கதையாக இடம்பெற்றிருந்தது. அக்கதையின் தமிழாக்கம் தனி நூலாக வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23183).