ஆனந்த கு.இராமநாதன் (புனைபெயர்: ஆணி). சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 ஜக்கரியா காலனி, முதல் தெரு, சூளைமேடு, 1வது பதிப்பு, பெப்ரவரி 2015. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 ஜக்கரியா காலனி, முதல் தெரு, சூளைமேடு).
(12),13-400 பக்கம், விலை: இந்திய ரூபா 350., அளவு: 21×13.5 சமீ., ISBN: 978-93-81322-41-3.
பதினைந்தாம் நூற்றாண்டு கம்போடியாவைப் பின்புலமாகக் கொண்ட இந்த சரித்திர நாவல் தமிழ் இலக்கிய உலகத்தில் முன்னர் ஒருவரும் தொடாத விடயங்களைத் தொடுகின்றது. நானூறு பக்கங்கள் கொண்ட இந்த நாவல் தமிழ் இலக்கிய உலகிலே முக்கியமான ஒரு படைப்பாகும். அறுநூறு ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆண்டு வந்த கைமர் சாம்ராச்சியத்தின் அந்திம காலத்தை மையமாகக் கொண்ட இந்த நாவல் அழிவை எதிர்நோக்கும் மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளச் செய்து கொள்ளும் பிரயத்தனங்களைச் சித்தரிக்கிறது. கைமர் இராச்சியத்தின் வீழ்ச்சிக்குக் காலநிலை மாற்றமும் ஒரு காரணியாய் இருந்திருக்கலாம் என்ற நவீன ஆராய்ச்சி முடிவுகளையும் இந்தக் கதாசிரியர் கருத்திற்கொண்டிருக்கிறார். பல இடங்களில் விறுவிறுப்பாகச் செல்லும் கதை சில இடங்களில் கொஞ்சம் கட்டுரைத் தன்மையுடன் செல்கின்றது. மகேந்திரவர்மனும் போலோமாவும் உறைந்து போன அகழிக்கு அடியில் நீந்தித் தப்பும் காட்சி அற்புதமாக விபரிக்கப்பட்டுள்ளது. காமத்துக்கு தேவைக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற விமர்சனமும் இந்நாவலுக்கு உள்ளது.