பொ.கருணாகரமூர்த்தி. தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001: 1வது பதிப்பு, ஒக்டோபர் 2014. (சென்னை 600005: மணி ஓப்செட்).
(8), 9-255 பக்கம், விலை: இந்திய ரூபா 225., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-82033-55-4.
ஜேர்மன் நாட்டில் ஒரு இலங்கைத் தமிழ்க் குடும்பம் புலம்பெயர்ச் சூழலில் தன் பாரம்பரிய வாழ்வினைக் காத்துக்கொண்டும், ஜேர்மன் சூழலின் செல்வாக்கை ஏற்றுத் தன்னை மாற்றிக்கொண்டும் வாழும் வாழ்க்கைச் சித்திரமே இந்நாவலாகும். அனந்தியைச் சூழவுள்ள சமூக வட்டங்கள் பலவாறானவை. அவளுடன் தமிழர் கல்வி நிலையத்தில் பயில்பவர்களாலானது, பெற்றோருடன் ஊடாடும் தமிழ்ச் சமூகம், ஜேர்மன் கல்லூரித் தோழர்களும் அதனுடன் பிணைந்த சூழலும், அவளது அயலும் சூழலும், அதற்கு வெளியில் விரியும் புறவுலகமும் என அவை பரந்துபட்டவை. 2012 ஜனவரி 1ம் திகதி எழுதத் தொடங்கும் டயறியை டிசம்பர் 30ம் திகதி நிறைவுசெய்யும் அனந்தி அந்த ஒரு வருட காலத்தில் தான் கண்ட, கேட்ட, உணர்ந்த செய்திகளை எழுதிவைக்கிறாள். அவையே ஒரு நாவலாக இங்கு விரிகின்றது.