சாந்தி நேசக்கரம். சென்னை 600 094: பூவரசி வெளியீடு, 20/2, சக்ரியா காலனி, 1ஆவது தெரு, சூளைமேடு, 1வது பதிப்பு, மே 2016. (சென்னை 600 094: பூவரசி பதிப்பகம்).
144 பக்கம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-81322-48-5.
இந்நாவல் இலங்கையின் விடுதலைப் போராட்டத்தின் பின்னணியில் ஆதித்தன் என்ற போராளியின் பார்வையில், அவனது முதலாவது கள அனுபவத்திலிருந்து தொடங்கி ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட காலம் வரையிலான போராட்ட வரலாற்றை பதிவுசெய்கின்றது. குப்பிளானைப் பிறப்பிடமாகக்கொண்ட சாந்தி ஜேர்மனியில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். ‘நேசக்கரம்’ என்ற தன்னார்வத் தொண்டர் நலன்புரி அமைப்பொன்றினை இயக்;கிவருகிறார். இவ்வமைப்பு இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும் ஆதரவற்ற பெற்றோரை இழந்த சிறுவர்கள் ஆதரவற்ற பெண்களுக்கான வாழ்வாதார நம்பிக்கைகளை ஏற்படுத்தும் முகமாகவும் ஆரம்பிக்கப்பட்டது. முன்னதாக சாந்தி ரமேஷ் வவுனியன் என்ற பெயரில் இன்னொரு காத்திருப்பு, அழியாத ஞாபகங்கள், உயிர்வாசம், கண்கள் எழுதிய கவிதையின் கடைசிச்சொட்டு ஆகிய தலைப்புகளில் கவிதைத் தொகுப்புகளையும், கலையாத கனவுகள் என்ற தலைப்பில் சிறுகதைத் தொகுதியொன்றையும் வெளியிட்டுள்ளார்.