தெணியான். கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, 202, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, நவம்பர் 2016. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர். இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை).
x, 128 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-9396-80-2.
சாதிகள் அற்ற ஒரு சமுதாயத்தை அடுத்த தலைமுறையினருக்கு விட்டுச்செல்லவேண்டிய பொறுப்புச் சுமை எமக்குள்ளது என்ற வேட்கையை இந்நாவல் வழியாக விதைக்க முயன்றுள்ளார். தெணியானின் பெரும்பாலான படைப்புகள் போலவே இது சாதீயத்தை கருவாகக் கொண்ட ஒரு நாவல்தான். வடமராட்சி பிரதேசத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வின் பாடுகளைக் பேசும் நாவல். ஈழத் தமிழர்களான தங்களுக்குள் ஒன்றான ஒரு சமூகப் பிரிவை அடக்கி ஒடுக்குவதற்கு யாழ்ப்பாண மேல்சாதி சமூகமானது தண்ணீரை எவ்வாறு ஒரு வலுமிக்க ஆயுதமாக பயன்படுத்தியது என்பதை இந்தப் படைப்பின் மூலம் உணர வைக்கிறார் தெணியான். பாதிக்கபட்டவர்களின் ஆக்கிரோசமான எதிர்குரலாக அல்லாது சமூகத்தில் நிலவுவதை உன்னிப்பாக அவதானித்து நிதானமாகவும் அழகாகவும் ஒழுங்கு ரீதியாகவும் பதிவு செய்வு செய்துள்ளார். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னான காலகட்டத்தில் நாவல் ஆரம்பமாகிறது. தாழ்த்தப்பட சமூகத்தில் ஏழ்மையில் வாடும் சிறுவர்களின் வாழ்க்கை சித்தரிப்புடன் களை கட்டுகிறது. தருமன் என்ற பாத்திரம் அற்புதமாக படைக்கப்பட்டு இருக்கிறது. நாவல் முடிந்த பின்னரும் மனதில் நிற்கிறான்.
கதையின் உண்மையான நாயகன் கால மாற்றங்களுக்கு ஏற்ப வெவ்வேறு முகங்களுடன் மேடையேறும் ‘ஏதனம்’ தான். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61295).