K.S.ஆனந்தன். கொழும்பு 14: வீரகேசரி வெளியீடு, த.பெட்டி எண் 160, எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் பிரைவேட் லிமிட்டெட், 185, கிராண்ட்பாஸ் வீதி, 1வது பதிப்பு, ஜுன் 1974. (கொழும்பு 14: எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் பிரைவேட் லிமிட்டெட், 185, கிராண்ட்பாஸ் வீதி).
(4), 138 பக்கம், விலை: ரூபா 3.40, அளவு: 18.5×14 சமீ.
இது ஒரு குடும்பக் கதை. இன்ப வாழ்வை எதிர்நோக்கும் இரு இளம் நெஞ்சங்கள், வாழ்க்கையின் முதற்படியிலேயே சநதேகம் என்னும் கொடிய சூறாவளியினால் தாக்கப்பட்டபோது, அவர்களின் உள்ளப் போராட்டங்களை அழகுறச் சித்திரிக்கிறது இந்நாவல். காதல் திருமணம் புரிந்த உமா-சிவசங்கர் தம்பதிகளிடையே ஏற்பட்ட சந்தேகம் குடும்பவாழ்வில் விரிசலை ஏற்படுத்துகிறது. இறுதியில் கடிதம் ஒன்றின் மூலம் தன் கணவன் பண்பானவன் என உணர்ந்து சந்தேகம் நீங்கி நிறைவு பெறுகிறாள். சந்தேகம் குடும்பவாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்பை நாவல் தெளிவாகப் படம்பிடிக்கின்றது. 22ஆவது வீரகேசரி பிரசுரமாக வெளிவந்த நூல்.