சம்பூர் ஸதீஸ் (இயற்பெயர்: அருமைநாதன் சதீஸ்குமார்). திருக்கோணமலை: அ.சதீஸ்குமார், 246, முருகன் கோவில் வீதி, இலிங்கநகர், 1வது பதிப்பு, 2015. (திருக்கோணமலை: ஸ்ரீராம் பிரின்டர்ஸ்).
79 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-44703-1-6.
சம்பூர் பிரதேசத்தின் தொன்மை என்ற தனது முதலாவது நூலுடன் எழுத்துலகப் பிரவேசம் செய்துள்ள வைத்திய கலாநிதி சம்பூர் சதீசின் மற்றுமொரு நூலாக இந்த வரலாற்றுக் குறுநாவல் வெளிவந்துள்ளது. சம்பூர் மண்ணின் தொன்மையினையும் கீர்த்தியினையும் பறைசாற்றும் வகையில் சுமார் நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் சம்பூர் அடங்கலான மூதூர் பிரதேசவாசிகள் இலங்கை அரசியலில் சிங்கள மன்னர்களோடு கொண்டிருந்த நட்புறவு பற்றியும் இங்கு வாழ்ந்த வீர மறவர்களின் வாழ்வியல் பற்றியும் அற்புதமான முறையில் இக்குறுநாவலில் விபரித்துச் செல்கிறார். இந்நாவலின் நாயகர்களான இளஞ்சிங்கன், வெற்றிமாறன், தாமரை போன்றோரின் தோற்றங்கள், அந்நியப் படையெடுப்பு, கண்டிப் பயணம், காதல், போர் போன்ற பல்வேறு விடயங்களையும் அன்றைய கலாச்சார பண்பாட்டுச் சூழலோடு ஆசிரியர் நகர்த்திச் செல்கிறார்.