11831 சில மனிதர்களும் சில நியாயங்களும்: சமூகக்கதை.

 கரவை மு.தயாளன் (இயற்பெயர்: மு.நற்குணதயாளன்). கென்ட், பிரித்தானியா: நா.சிவானந்தசோதி, திருமுருகன் அறிவகம், 41, Haddington Road, Bromley,Kent BR1 5RG, 1வது பதிப்பு, 2016. (லண்டன்: அச்சக விபரம் தரப்படவில்லை).

208 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.,ISBN: 978-0-9935325-9-7.

தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து லண்டனுக்குச் சென்று குடியேறியவர்களையும் அவர்களின் இரண்டாம் மூன்றாம் தலைமுறையினரையும்; பாத்திரங்களாகக் கொண்டு இந்நாவல் புனையப்பட்டுள்ளது. மூலவேரைத் தாயகத்தில் ஊன்றியபடியே லண்டனில் வாழமுனையும் பெற்றோருக்கும், அவர்களது தமிழினம் பற்றிய புரிதலின் குறைபாடுகளின் காரணமாகத் தம் வாழ்வை முழுமையாக அந்நிய மண்ணில் பதியம் வைத்து வளர்ந்து அதையே தாயகமாகவும் தமது கலாச்சாரமாகவும் கருதிவாழும் இரண்டாம் தலைமுறையினருக்கும் இடையே எழும் மனப்போராட்டம், முரண்நிலை என்பவற்றை இந்நாவல் பிரதிபலிக்க முனைகின்றது. புலம்பெயர்ந்த சமூகத்தின் புதிய தலைமுறையினர் தமது மூத்தோரின் மரபுகளையும் கலாசாரத்தையும் அறிவுபூர்வமாக அறியாதவர்கள். அவர்கள் தாங்கள் வாழும் சமுதாயத்தின் நாகரிக நடைமுறை வாழ்க்கையுடன் இயல்பாகவே ஒன்றிப் போனவர்கள். அவர்களிடத்தில் மூத்தவர்களின் பழைமையானதும் புகலிடத்துடன் ஒன்றாததுமான தனித்துவமான கலாச்சாரத்தை எதிர்பார்க்க முடியாது. எதிர்காலத் தலைமுறையினர் மேலும் முற்றாகவே மாறித் தாம் வாழும் ஐரோப்பிய கலாச்சாரத்தினுள் முற்றாகவே மூழ்கித் தம் சுயத்தை இழக்கும் ஆபத்தினை இந்நாவல் முகத்திலறைந்து சொல்கின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61255).

ஏனைய பதிவுகள்

Unlimit Casino Utvärderin

Content Casino Online Tillsammans Svenska språke Kronor Som Valuta | Instcasino kasinobonus förklaras Varje Kan Själv Testa Gratis Slots I Storbritannien? Ultimata 300 Gratissnurr Utan

No-deposit Harbors

Content Positives and negatives Of No deposit Incentives You Claimed A free of charge Twist Online casino Discount coupons Greatest Online Position Game Over the