11833 தமிழணங்கு அல்லது இளநகைச் சிறுமி.

வே.சின்னையா. சிங்கப்பூர்: வே.சின்னையா, 1வது பதிப்பு, 1936. (சிங்கப்பூர்: நான்யோ அச்சியந்திரசாலை).

(4), 64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,அளவு: 18×13.5 சமீ.

இந்நாவல் யாழ்ப்பாணம் வல்வையம்பதி வேலுப்பிள்ளை சின்னையா அவர்களால் எழுதப்பெற்று மதுரைத் தமிழ்ச் சங்கம், யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றின் பரீட்சகருள் ஒருவரான ஸ்ரீலஸ்ரீ சு.நவநீதகிருஷ்ண பாரதி அவர்களால் பரிசோதிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பரமேஸ்வராக் கல்லூரியின் தலைமைத் தமிழ்ப் போதனாசிரியருமான சு.நவநீதகிருஷ்ண பாரதி அவர்கள் இந்நூலுக்கு அணிந்துரையும் வழங்கிச் சிறப்பித்துள்ளார். ‘இது கதையின் போக்காலும், அமயத்திற் கேற்ற மேற்கோள்களின் சிறப்பாலும், விழுமிய வசனத்திறப் பாட்டாலும் நிகரற்று விளங்கா நின்றது. இதனைக் கற்றார் தமிழிலே ஆர்வமிக் குடையவராகிப் புலமை எய்துதற்கு முற்பட்டுத் தேற்றம் பெறுவர் என்பது எனது நம்பிக்கை” என்று அவர் இந்நூல் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இந்நாவலின் இடையிடையே நீதிநெறிச் செய்யுள்களும், உவமை மொழிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. முதல் 40 பக்கங்களில் இந்நாவல் இடம்பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து ‘நவரச கதாமஞசரியின் கதையிலுள்ள ஒரு பாகம்’ என்ற தலைப்பின்கீழ் ஆசிரியர் 1930இல் வெளியிட்ட நவரச கதாமஞ்சரியில் இடம்பெற்ற இரண்டாவது கதை, இரண்டாவது பதிப்பாக, சில திருத்தங்களுடன் 41-52ஆம் பக்கங்களில் இடம்பெற்றுள்ளன. மேலும், முன்னைய நூலில் இடம்பெற்ற நான்காவது கதை, திருத்தங்களுடன் இந்நூலில் 53-64 ஆம் பக்கங்களில் ‘மூன்றாவது கதை’ என்ற தலைப்புடன் மீள்பிரசுரமாகியிருக்கின்றது.

ஏனைய பதிவுகள்