திமிலை மகாலிங்கம் (இயற்பெயர்: சின்னையா தங்கவேல்). மட்டக்களப்பு: உஷா சிவதாசன், ஆசிரியர், உதயம் வெளியீடு, 1வது பதிப்பு, ஜுலை 1991. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம், 65, லேடி மனிங் டிறைவ்).
(4), 116 பக்கம், விலை: ரூபா 25., அளவு: 18.5×12.5 சமீ.
உதயம் வெளியீட்டு வரிசையில் ஏழாவது நூலாக வெளிவந்துள்ளது. (ஒளி 4, கதிர் 1: ஜனவரி-ஜுலை 1991). இதில் பாதை மாறுகிறது, பொன் குஞ்சுகள் ஆகிய இரு குறு நாவல்கள் இடம்பெற்றுள்ளன. திமிலை மகாலிங்கம் (ஏப்ரல் 29, 1938 – டிசம்பர் 13, 2010) 1960களில் புகழ்பெற்ற ஒரு ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளருமாவார். இலக்கிய உலகில் கவிதை, கட்டுரை, நாடகம், சிறுகதை, புதினம் என அனைத்திலும் எழுதியவர். அப்போதைய மட்டக்களப்பு தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினராக இருந்தவர். ‘தேனமுத இலக்கிய மன்றம்’ என்ற அமைப்பின் மூலம் பல நாடகங்களை அரங்கேற்றினார். சிறுவர் இலக்கியத்திலும், சில நூல்களை வெளியிட்டார். இவர் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசாரப் பேரவையின் நீண்டகால உறுப்பினர், 1993 முதல் பிரதேச செயலகம் நடத்திய கலாசார விழா தேனகம் சிறப்பு மலர் வெளியீடு, ஆகியவற்றில் கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளார். மேற்படி கலாசாரப் பேரவையினால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டுள்ளார். 20.12.2010 இல் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் இவருக்கு ‘கலைச்சுடர்’ விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. திமிலை மகாலிங்கம் எழுதிய இரு குறுநாவல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13587).