11842 புனித யாத்திரை.

சிவ. தியாகராஜா.  United Kingdom: தமிழர் தகவல் நடுவம், Bridge End Close, Kingston KT2 6PZ, இணை வெளியீடு, London SW17 7EZ: புதினம் வெளியீடு, 38 ஆழககயவ சுழயனஇ 1வது பதிப்பு, ஜுலை 2016. (சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர்).

306 பக்கம், விலை: இந்திய ரூபா 300., அளவு: 25×19 சமீ., ISBN: 1-85201-027-4.

சென்ற நூற்றாண்டின்; இறுதியில் ஈழமண்ணில் 1995 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி இடம்பெற்ற மிக மோசமான இடப்பெயர்வான  வலிகாமம் இடப்;பெயர்வின் அவலங்களைச் சித்திரித்துக்காட்டும் ஒரு அற்புதமான நாவல்.

அந்த அவல நிகழ்வுகளிடையே பயணித்த ஒரு ஈழத்தமிழ் இளைஞனின் வாழ்க்கைப் பயணத்துடன் நாவலும் சேர்ந்து பயணிக்கின்றது. ஈழத்தமிழரின் ஒரு காலகட்ட வாழ்வை சமூக உணர்வுடன் இந்நாவல் வரலாறாகப் பதிவுசெய்திருக்கின்றது. ஈழத்தமிழர்களின் மிக முக்கிய ஆளுமையான கலாநிதி சிவ தியாகராஜா அவர்கள் மருத்துவம், உளவியல், வரலாறு, மரபணுவியல், இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருப்பவர். நாவல் சிறுகதை உலகிலும் தனி முத்திரை பதித்தவர். அந்த வகையில் சுமேரியரின் முதல் நாவலான கில்கமேஸ் காவியத்தை தமிழில் மொழிபெயர்த்ததிலிருந்து 10 இற்கும் மேற்பட்ட சிறந்த நாவல்களை எழுதியுள்ளார். கடந்த மூன்று வருடங்களாக புதினம் இதழில் எழுதிவந்த வாலாற்றுத் தொடரான புனித யாத்திரை தற்போது அச்சேறி நூலுருப் பெற்றிருக்கிறது.

ஏனைய பதிவுகள்