11855 ஆன்மீகமும் விழுமியங்களும்.

இராகி (இயற்பெயர்: இரா.கிருஷ்ணபிள்ளை). காரைதீவு -2 (கிழக்கு மாகாணம்): இரா.கிருஷ்ணபிள்ளை, மலரகம், நடராஜானந்தா வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (காரைதீவு 12: நிதுஸ் ஓப்செற் அச்சகம்).

iv, 76 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×15 சமீ.

இந்நூலிலுள்ள 19 கட்டுரைகளும் அறக்கருத்தை அடிப்படையாகக் கொண்ட கட்டுரைகளாகவும், மத விழுமியங்களை மலரவைக்கும் கட்டுரைகளாகவும் இடம்பெற்றுள்ளன. வாழ்க்கைக்கு வழிகாட்டும் புராணங்கள், பக்திக்கு வித்திட்ட பாவையர், மகேசனின் மனம் கவர்ந்தவர், இயற்பகையாரா சிறுத்தொண்டரா?, ஓம் உணர்த்தும் உண்மைப் பெயர், ஒன்றே குலம் ஒருவனே தேவன், பெரிய புராணமும் வரலாற்றுப் பதிவுகளும், சைவம் விளக்கும் சான்றுகள், கலைமகளும் கருப்பொருள்களும், பாரதி கண்ட சக்தி, நாவலரும் விபுலாநந்தரும், தேசிய உணர்ச்சியும் கவிதைகளும், பெண்கள் அன்றும் இன்றும், போதை வஸ்துக்கள், சுனாமி தந்த வடுக்கள், தற்கால சமூக அழிவுகள், மக்கள் தொடர்பாடலும் ஊடக சுதந்திரமும், மோதலை விடுத்து எதிர்காலத்தை நோக்குவோம், அனர்த்தங்களின்போது தேசிய தலைமைத்துவத்தின் பங்கு, மனிதாபிமான விழுமியங்களும் நிறைவான மனிதர்களும் ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47442).

ஏனைய பதிவுகள்