11856 இலக்கியச் சிமிழ்.

நயினை கி.கிருபானந்தா. யாழ்ப்பாணம்: நயினை கி.கிருபானந்தா, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(3), 44 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 17.5×12 சமீ.

கவிஞர் காரை செ.சுந்தரம்பிள்ளை அவர்களின் நினைவாக, யாழ். இலக்கிய வட்டச் செயலாளர் நயினை கி.கிருபானந்தா அவர்களால் எழுதப்பட்ட இந்நூல் பல்வேறு  சுவைமிகு இலக்கியக் குறிப்புகளின் தொகுப்பாகும். தான் படித்துச் சுவைத்த இலக்கிய நூல்களின் தேர்ந்த குறிப்புகளை இங்கு படையலாகத் தந்துள்ளார். பாரதியின் காணி நிலம், குறளையும் குறுக்கியவர், தமிழன் கணக்குப்போட்டு வாழ்பவனா? உப்பிட்டவரை உள் அளவும் நினை, இராமன் ஆண்டாலென்ன? இராவணன் ஆண்டாலென்ன? பந்திக்கு முந்து படைக்குப் பிந்து, தமிழறிவோம், குதிரையை விட்டுவிடுவோம்-குதிரை வைத்துக்கொள்வோம், நட்பு, நிலவுக்கு ஒளிக்கலாம், பேயின் பேராசை, தையல் சொற்கேளேல் எனினும் ஒளவை சொற்கேளீர், தேன் வந்து பாயுது காதினிலே, நகையினால் விளைந்த காவியங்கள், கண்டது கற்போம், கல்கண்டு, மோதிரக் கையால் ஒரு குட்டு, பிணை மானும் துணை மானும், முப்பாலில் பனை, உயர்ந்த உள்ளம் உயர்ந்த இடம், புலவர்களை பாதுகாத்த புரவலர்கள் பகழ் ஏந்தி நிற்கின்றார்கள், கள்ளர் மறவர் அகம்படியர், ஒளவையார் உண்ட விருந்து, மிக மெல்லிய உள்ளம் கொண்ட பாவலர்கள், ஒளவையும் உவமையும், சதுரர், நாயைக் கண்டால் கல்லைக் காணேன் கல்லைக் கண்டால் நாயைக் காணேன், தாடி வைத்திருந்தாரா திருவள்ளுவர்? கம்பரும் இளங்கோவும் தோல்வி அடைந்த இடங்கள், ஏமாங்கத நாட்டின் சிறப்பு, கம்பன் காட்டும் நாகரீகம் ஆகிய குறுந்தலைப்புகளில் ஏராளமான சுவைமிகு குறிப்புக்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்