11858 கட்டுரைக் களஞ்சியம்.

முகில்வண்ணன். (இயற்பெயர்: வேலுப்பிள்ளை சண்முகநாதன்). கல்முனை: கண்மணி பிரசுரம், நெசவுநிலைய வீதி, பாண்டிருப்பு, 1வது பதிப்பு, மார்கழி 2014. (தெகிவளை: ஏ.ஜே.பதிப்பகம்).

x, 11-209 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-54011-6-6.

‘முகில்வண்ணனின் கட்டுரைக் களஞ்சியம்’ என்ற அட்டைப்படத் தலைப்புடன் பிரசுரமாகியுள்ள இந்நூலில் ஆசிரியர்கள், மாணவர்களுக்குரிய வகையில் எழுதப்பட்ட 50 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கடவுள் வணக்கம், அன்னையும் பிதாவும், தந்தை சொல், எழுத்தறிவித்தவன், மக்கள் கடன், பெற்றோர் பாவம், ஒழுக்கம், காலமறிந்து செய், போதும் என்ற மனம், கடமைப்படுதல், கோடி பெறும், ஊர்வாய், மதிப்பும் மரியாதையும், கடமையைக் கண்ணெனப் போற்றுவோம், ஒழுக்கம் வழுவா உள்ளம் வேண்டும், எல்லாம் அழிந்து போய்விடும், எல்லோருக்கும் கவலை ஒன்றே, ஆசானைக் கௌரவித்தல், மூவகை மனிதரும் நேரமும், குருவும் சீடனும், கடன் பட்டார் நெஞ்சம், பெற்ற மனம், அன்பே உலகமகா சக்தி போன்ற தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. 1985இல் எழுதப்பட்டு 1986இல் தினகரன் பத்திரிகையின் கல்வி அரங்கு என்னும் பகுதியில்  தொடராக வெளிவந்தது. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 1001433). 

ஏனைய பதிவுகள்

Casinos Com Bônus Abicar Deposit

Content Free Spins Acostumado Sem Casa Vs Ato Sem Armazém Cuia Casas De Apostas Dão Bônus No Recenseamento? Guias Puerilidade Apostas Vale An afogo Apreciar