த.மேகராசா (புனைபெயர்: கவிஞர் மேரா). மட்டக்களப்பு: பட்டிப்பளைப் பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியம், 1வது பதிப்பு, நவம்பர் 2015. (மட்டக்களப்பு: ஷெரோனி அச்சகம், கூழாவடி).
xi, 137 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-53621-4-6.
இந்நூலில் கண்ணகி வழக்குரையிலும் சிலப்பதிகாரத்திலும் வரும் பாத்திரப் படைப்புக்கள் ஆராயப்பட்டுள்ளன. சிலப்பதிகாரக் கதையின்படி கண்ணகி, மாதவி, கோவலன் ஆகிய மூன்று பாத்திரங்களும் முக்கியமானவை. இவை ஒப்பீட்டு நோக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய துணைப் பாத்திரங்களும் மனிதநேயப் பண்பினை அடிப்படையாகக்கொண்டு ஆராயப்பட்டுள்ளன. தமிழக காப்பியமும் ஈழத்துத் தமிழ்க் காப்பியமும், கதைப் போக்கு, கண்ணகியின் குணநலங்கள், மாதவியின் குணநலங்கள், கோவலனின் குணநலங்கள், மனிதநேயப் பாத்திரங்கள், ஆண் அதிகார பண்பாட்டு அரசியலும் இரு பெண் பாத்திரங்களும் ஆகிய ஏழு இயல்களில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.