ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: கோப்பாய் சிவம் பாராட்டு விழாக் குழுவினர், ஸ்ரீநகரம், அளவோடை வீதி, இணுவில் மேற்கு, சுன்னாகம், 1வது பதிப்பு, மார்ச் 2015. (சுன்னாகம்: கஜாநந்த் பிரின்டர்ஸ், மானிப்பாய் வீதி, இணுவில்).
viii, 120 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ. மலரும் நினைவுகள், சக்தி பிறக்கட்டும், வாழ்க்கையின் இலட்சியம் இலட்சிய வாழ்க்கையே, ஆற்றுப்படுத்தும் அண்ணல்கள், உதவிகள் பலவிதம்-ஒவ்வொன்றும் ஒருவிதம், இரப்பவர்கள் மட்டுமா இரவலர்கள், வருவாய்க்கேற்ப வாழ்க்கையை அமைத்தல், எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள் தேறுதல்கள், நமது கல்விப் பாரம்பரியத்தின் இன்றைய நிலை, இது இவர்களுக்குத் தெரியாததேன், நுகர்வோரை நோக்காத வியாபாரங்கள், சமூக மனநோயாளர்கள், எத்தனை காலம்தான் ஏமாற்றுவார், கமலனும் விமலனும், தெருப்பயண ஞானம், இதய ராகங்கள், இளமை இலக்கிய நினைவுகள், தொடர்பாடல் வெற்றிபெற, சிந்தனை மேடை ஆகிய 19 தலைப்புகளில் கோப்பாய் சிவம் எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு. வித்யாபூஷணம், கலாபூஷணம் பிரம்மஸ்ரீ ப.சிவானந்த சர்மா அவர்களின் மணிவிழா மற்றும் கலாபூஷணம் விருது பெற்றமையை முன்னிட்டு 15.3.2015 அன்று இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது