மு.அநாதரட்சகன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: மு.இராஜவரோதயன், ஆனந்த கானம், ஆவரங்கால், புத்தூர், 1வது பதிப்பு, பெப்ரவரி 2005. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டேர்ஸ், இல. 424, காங்கேசன்துறை வீதி).
vi, 146 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
அமரர் க.முருகேசு வாத்தியார் வரலாற்றுப் பதிவுகள் (மு.அநாதரட்சகன்), தமிழீழத்தின் அம்பேத்கார் முதல்வர் முருகேசனார் (மா.க.ஈழவேந்தன்), இருள் சூழ்ந்த வேளை ஒளி தந்த விடிவெள்ளி (இ.சிவநேசன்), சமய, சமூக, இன விடுதலையின் குரல் (சுரேஸ் பிரேமச்சந்திரன்), முருகேசு மாஸ்டர் ஒரு தமிழ் வாத்தி அல்ல (புதுவை இரத்தினதுரை), யார் இந்த முருகேசு (சி.கிருஷ்ணபிள்ளை), முயற்சியினால் உயர்வுபெற்ற முன்னோடி (செ.சிவசம்பு), மனிதருள் ஒரு மாணிக்கம் (த.சின்னத்துரை தமிழரசு), எனது கிராமத்தின் முதல் உபாத்தியாயர் முதன்மை உபாத்தியாயர் (மு.செல்லப்பாக்கியம்), வட அல்வை முருகேசனாரின் வாழ்வும் பணிகளும் (சுகணா), என்னை உருவாக்கிய ஆசான் (சி.பத்மலிங்கம்) ஆகியவை உள்ளிட்ட பல்வேறு மனப்பதிவுகளினூடாக வட அல்வை முருகேசனாரின் வாழ்வும் பணிகளும் இந்நூலில் வெளிச்சமிடப்பட்டுள்ளன. மேற் குறிப்பிட்ட பிரமுகர்களுடன் க.நவம் (கனடா), சோ.பத்மநாதன், கோப்பாய் சிவம், மா.கருணாநிதி, செ.திருநாவுக்கரசு, கனகமனோகரன், நவாலியூர் நா.செல்லத்துரை, ஆழ்வார் காசிநாதர் யோகராஜா (சுவிஸ்), சி.கணேசமூர்த்தி, கவிஞர் வி.கந்தவனம் (கனடா), அ.க.த.கிருஷ்ணராசா, இ.வே.செல்வரட்ணம் (கனடா), சி.தெய்வேந்திரன், செ.சதானந்தன் ஆகியோரின் மனப்பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.