அகளங்கன் (இயற்பெயர்: நா.தர்மராஜா). மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், 64 கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, 2008. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).
160 பக்கம், விலை: ரூபா 225., அளவு: 18×13 சமீ., ISBN: 978-955-8715-52-9.
அகளங்கன் எழுதிய இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு. 48ஆவது பிரியா பிரசுரமாக வெளிவந்துள்ளது. இதில் தாய்மை அது தெய்வீகம், உயிரினங்களிடமிருந்து மனிதன் கற்றவை, வீட்டுக்கு விளக்கு வைக்கும் விந்தைக் குருவி, ஒளவையாரும் சமாதானத் தூதும், மாட்டு வண்டில் முதல்ஆகாய விமானம் வரை, எகலைவனின் கட்டை விரல், ஆச்சரியப்பட வைக்கும் அக்காலப் போர், காக்கைச் சிறகினிலே, கொலைக் களஞ் சென்ற இரு நிரபராதிகள், பாரதத்தில் பாஸ் நடைமுறை, பயன்படாத கல்வி, உருவறியாப் பிள்ளை அழுதது, விட்ட குறை தொட்ட குறை, படைத்தவன்மேல் கோபங்கொண்டு, தனக்குத்தானே இரங்கற்பா பாடியவர் ஆகிய சுவையான விடயத் தலைப்புகளில் அகளங்கனின் 15 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.