றமீஸ் அப்துல்லா, க.இரகுபரன் (தொகுப்பாசிரியர்கள்). ஒலுவில்: மொழித்துறை, தென்கிழக்குப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xx, 219 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-627-115-7.
பேராசிரியர் ம.மு.உவைஸ் நினைவுக் கருத்தரங்க சிறப்பு வெளியீடாக இத்தொகுப்பு அமைகின்றது. இதில் வழியும் மொழியும் (எம்.எம்.உவைஸ்), தமிழிலக்கிய வரலாற்றில் இஸ்லாமியத் தமிழிலக்கியங்கள் (கா.சிவத்தம்பி), தமிழில் இஸ்லாமிய இலக்கியம்: அதன் மொழியியல் தனித்துவம் (எம்.ஏ.நுஃமான்), இஸ்லாம் தந்த இலக்கியம் (மு.வரதராசன்), இசுலாம் தந்த இலக்கியம் (ச.வே.சுப்பிரமணியன்), அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ் (எ.எம்.எ.அஸீஸ்), இஸ்லாமியர் தமிழ்மொழிக்காற்றிய தொண்டு-1 (சு.வித்தியானந்தன்), இஸ்லாமியர் தமிழ்மொழிக்காற்றிய தொண்டு-2 (சு.வித்தியானந்தன்), இஸ்லாமியப் பக்திப் பாடல்கள் (சி.தில்லைநாதன்), இலங்கை இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாறு (க.இரகுபரன்), இலங்கை முஸ்லிம்களின் நவீன இலக்கியமும் இன அடையாளமும் (றமீஸ் அப்துல்லா) ஆகிய 11 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. பின்னிணைப்புகளாக பேராசிரியர் ம.மு.உவைஸ் பற்றிய பல்வேறு அறிஞர்களின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அவை ஆன்ற அறிவும் அகன்ற உள்ளமும் (சி.தில்லைநாதன்), பேராசிரியர் ம.முஹம்மது உவைஸ் (கா.சிவத்தம்பி), இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆய்வுகளும் பண்பாட்டுப் பங்களிப்பும் (எம்.எஸ்.எம்.அனஸ்), அகராதிப் பணியில் பேராசிரியர் ம.மு.உவைஸ் (ராஹிலா ஷியாத்), உவைஸ் ஒர் அறிமுகம் (எஸ்.எச்.எம்.ஜெமீல்) ஆகிய 5 கட்டுரைகளை பின்னிணைப்பில் காணலாம்.