11874 அகநானூறு வசனம்: களிற்றியானை நிரை.

ந.சி.கந்தையாபிள்ளை. சென்னை: ஒற்றுமை ஆபீஸ், தியாகராய நகர், 1வது பதிப்பு, 1938. (சென்னை: The Royal Printing Works).

116 பக்கம், விலை: இந்திய ரூபா 1.00., அளவு: 18.5×12.5 சமீ.

அகநானூறு சங்க காலத்தைச் சேர்ந்த எட்டுத்தொகை எனப்படும் தமிழ் நூல் தொகுப்பில் உள்ள ஒரு நூலாகும். இது ஓர் அகத்திணை சார்ந்த நூல் என்பதுடன் இதில் நானூறு பாடல்கள் அடங்கியுள்ளதால் இது அகநானூறு என வழங்கப்படுகிறது. நெடுந்தொகை என்ற பெயரும் இதற்கு உண்டு. இதில் அடங்கியுள்ள பாடல்கள் ஒரே புலவராலோ அல்லது ஒரே காலத்திலேயோ இயற்றப்பட்டவை அல்ல. இது பல்வேறு புலவர்கள் வெவ்வேறு காலங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும். எட்டுத் தொகை நூல்களுள் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய ஐந்தும் அகம் பற்றியன. இவற்றுள் அகம் என்னும் சொல்லால் குறிக்கப்படுவது அகநானூறு மட்டுமே. அகத் தொகையுள் நீண்ட பாடல்களைக் கொண்டமையால் இதனை, ‘நெடுந்தொகை’ என்றும் கூறுவர். ந.சி.கந்தையாபிள்ளையினால் எழுதப்பட்டுள்ள இந்நூலில் முகவுரை, உரிப்பொருள் விளக்கம், களிற்றியானை நிரை, அருஞ்செய்யுட் பகுதிகள், மணிமிடை பவளம், நித்திலக் கோவை, பாயிரம் ஆகிய ஏழு இயல்கள் உள்ளன. அகநானூறு பற்றிய தெளிவான விளக்கத்தை இந்நூல் வழங்குகின்றது. (அமிழ்தம் பதிப்பக ந.சி.க. நூல் தொகுப்பில் 3வது நூலாகவும் இடம்பெற்றுள்ளது. இப்பதிப்பிற்கான  நூல்தேட்டம் பதிவிலக்கம் 3384. இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 604.)

ஏனைய பதிவுகள்