நுணாவிலூர் கா.விசயரத்தினம். பிரித்தானியா: விஜே பப்ளிக்கேஷன், 35 Southborough Road, Bickley, Bromley, Kent BR1 2EA, 1வது பதிப்பு, 2015. (சென்னை 94: பி.வி.ஆர். ஆப்செட்).
viii, 172 பக்கம், சித்திரங்கள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ., ISBN: 978-0-9575862-2-2.
சங்க இலக்கியங்களில் காணப்பெற்ற பண்டைத் தமிழ் மகளிர் பற்றிய பெருமைபேசும் நூலாக இது அமைந்துள்ளது. மகாபாரத மங்கா மாண்புடை மகளிர், தொல்காப்பிய மகளிர், சிலப்பதிகாரத்தில் பவனிவரும் மகளிர், மணிமேகலையில் தோன்றும் மகளிர், சீவக சிந்தாமணியில் உலாவும் மகளிர், வளையாபதியில் வளையல் அணிந்த வனிதையர், குண்டலகேசி நூலின் கதாநாயகி குண்டலகேசி, கம்பராமாயணம் காட்டும் அரச மகளிர், பண்டைப் பாடல் பாடிய பெண்பாற் புலவர், பெண்பெருமை பேசும் சங்க இலக்கியங்கள், சங்க இலக்கியங்கள் பேசும் பெண் கூந்தற் பெருமை, ஆகிய பதினொரு ஆக்கங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 249097).