ஏ.எச்.எம்.நவாஷ். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, கார்த்திகை 2015. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
iv, 118 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-4676-37-4.
வெலிமட, ஈழக்கவி ஏ.எச்.எம்.நவாஷ் அவர்களின் ஆறு ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்ட நூல். புதுமைப்பித்தனின் சிகரச்சாதனை ‘சாப விமோசனம்’, வ.அ.இராசரத்தினத்தின் ‘தாய்’ சிறுகதையின் தனித்துவம், இரு யுகமாற்றங்களை நிறுவும் ஜெயகாந்தனின் ‘யுகசந்தி’ ஒரு விமர்சன அணுகல், என்.எஸ்.எம். ராமையாவின் ‘ஒரு கூடைக் கொழுந்து’ ஒரு பகுப்பாய்வு, செ.கதிர்காமநாதனின் ‘வெறும் சோற்றுக்கே வந்தது’ ஒரு அவதானிப்பு, மருதூர்க் கொத்தனின் ‘ஒளி’ பற்றிய நுண்ணாய்வு ஆகிய ஆறு தலைப்புக்களில் இவ்வாய்வுக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்டுரையிலும் அச்சிறுகதை தொடர்பான தகவல்கள் மாத்திரமன்றி சிறுகதையாசிரியர், கதைக்கான பின்புலம் என்பனவற்றையும் ஆழமாக ஆய்வுசெய்துள்ளார். இந்நூல் 54ஆவது ஜீவநதி வெளியீடாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61503).