11880 நாவல் இலக்கியம்.

சபா.ஜெயராசா. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

iii, 76 பக்கம், விலை: ரூபா 375., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-659-472-0.

இலக்கிய வெளியில் நிகழ்ந்த மிகப்பெரிய கண்டுபிடிப்பாக நாவல் அமைந்துள்ளது. சாமானியர்களின் பல குரல்களையும், பல கருத்தாடல்களையும், பன்முகக் கோலங்களையும் உள்ளடக்கிய அனைத்தும் தழுவிய வடிவமாக நாவல் மேலெழுந்துள்ளது. தமிழ்ச் சூழலில் தனித்தனி நாவலாசிரியர்கள் பற்றியும், தமிழ் நாவலின் வளர்ச்சி பற்றியுமே பெருமளவில் பேசப்பட்டு வந்துள்ள நிலையில் இந்நூல் நவீன திறனாய்வு நோக்கில் நாவலின் பரிமாணங்கள் பற்றியும், நாவல் வடிவத்தில் நிகழ்ந்த ஊடு தலையீடுகள் பற்றியும் 20 தலைப்புகளில் அமைந்த சிறு கட்டுரைகளின் வழியாக விபரிக்கின்றது. சமய நாவல்கள், வரலாற்று நாவல்கள், பெண்ணிய அறிவியல் நாவல்கள், உளவியல் நாவல்கள், துப்பறியும் நாவல்கள், திகில் நாவல்கள், எதிர் நாவல்கள், நாவலும் ஊடுநூலியமும், ஆங்கில நாவல்கள், பிரெஞ்சு நாவல்கள், ரூசிய நாவல்கள், வங்காள நாவல்கள், சிங்கள நாவல்கள், மலையாள நாவல்கள், வட்டார நாவல்கள், நாவலின் சமூகவியல், நாவலின் கலை நுட்பங்கள், சமூக நாவல்கள், நாவல்-ஒரு நெடுங்கோட்டு நோக்கு, நிறைவாக-நாவலின் உருமாற்றக் கோட்பாடு ஆகிய விரிவான தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்