அல். அஸூமத். வெல்லம்பிட்டிய: அல்.அஸூமத், இல.50, கோத்தமி மாவத்தை, வெலேவத்தை, 1வது பதிப்பு, டிசம்பர் 2016. (கொழும்பு 14: பிரின்ட் சிட்டி).
xxiv, 525 பக்கம், விலை: ரூபா 900., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-52134-6-2.
யாப்பிலக்கணத்தின்படி தமிழ்ப் பா இயற்றுவதற்குரிய பல்வேறு இலக்கணங்களையும் இந்நூல் ஆய்ந்துள்ளது. கவிதைகளால் தன் உணர்வுகளை, கருத்துக்களை முன்வைக்க முனையும் கவிஞர்களுக்கு இந்நூல் ஒரு கையேடாகும். புதியவர்கள் யாப்பிலக்கணத்தைத் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும் என்ற நீண்டகால வேட்கையை ஆசிரியர் இந்நூல் வழியாகத் தீர்த்துக்கொண்டுள்ளார். இரு பாகங்களில் அமைந்த இந்நூலின் உறுப்பியல் என்ற முதற்பாகத்தில் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய விடயங்கள் தனித்தனி அத்தியாயங்களில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இரண்டாம் பாகமாகிய செய்யுளியலில் ஆசிரியப் பாவினங்கள், வெண்பா, வெண்பாவினம், கலிப்பா, கலிப்பாவினம், வஞ்சிப்பா, வஞ்சிப் பாவினம், மருட்பா, பிற்காலத்துப் பாவினங்கள், குறும்பா ஆகியவை தனித்தனி அத்தியாயங்களில் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61604).