11887 ஒரு வாசகனின் வாசகங்கள் (சிறுகதைகள்-கவிதைகள்-எண்ணச் சிதறல்கள்).

இளநெஞ்சன் முர்ஷிதீன். கொழும்பு 10: B.M.முர்ஷிதீன், 239, ஸ்ரீ சதர்ம மாவத்தை, மாளிகாவத்தை, 1வது பதிப்பு, ஏப்ரல் 1988. (கொழும்பு 12: வீனஸ் பிரின்டர்ஸ், 107/18ஏ, பண்டாரநாயக்க மாவத்தை).

(4), 5-73 பக்கம், விலை: ரூபா 15., அளவு: 21×14.5 சமீ.

குர் ஆனே உன்விலை என்ன?(10.3.1985 அன்று இலங்கை இஸ்லாமிய சிறுகதைப் போட்டியில் பரிசுபெற்ற சிறுகதை), விடிந்த பொழுதில் சில விண்மீன்கள், திசைமாறிய நம்பிக்கைகள் ஆகிய சிறுகதைகளும், கிரிக்கெட் காலத்து தரிசனங்கள், முகாரி பாடும் பூபாளங்கள், ஒரு மல்லிகை இடம்பெயர்ந்தபோது ( 23.8.1984 காலை சேர் ராசிக் பரீத் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு எழுதப்பட்ட கவிதை), மூச்சுத்திணறும் ஒரு சமூகத்துக்காக  ஆகிய கவிதைகளும், இளசுகள் மீட்கும் கானங்கள், புனித எண்ணங்களுக்குள் பதிய சலனங்கள் ஆகிய மெல்லிசைப் பாடல்களும், சிந்தித்தேன் சிந்தித்தேன், என்னுள் பூத்த எண்ணப் பூக்கள் ஆகிய தத்துவ முத்துக்களும், சில நேசங்களின் வாசகங்கள் (வாசகர் கடிதம்), ஒரு சமூகம் மௌனமானால் (இலக்கியக் கட்டுரை), ஒரு சின்ன அறிமுகத்தில் (நூருல் அயின் நஜ்முல் ஹூசைன் பற்றியது) ஆகிய பலவினப் படைப்பாக்கங்கள் இந்நூலில் மலர்க் கதம்பமாகக் கோர்க்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 20686).

ஏனைய பதிவுகள்

A global gambling and technical team

Blogs Bitcoin casino Cloudbet mobile: Buffalo Hook™ Seemed Posts Large Jackpots Aristocrat Betting efforts There is a heightened chance of successful 100 percent free revolves