11891 விபுலானந்தத் தேன்.

அருள் செல்வநாயகம். சென்னை 1: பாரி நிலையம், 59 பிராட்வே, 1வது பதிப்பு, நவம்பர் 1956. (காஞ்சீபுரம்: முத்தமிழ் அச்சகம்).

xxx, 144 பக்கம், விலை: இந்திய ரூபா 2.80., அளவு: 18.5×13 சமீ.

சைவநெறி சம்பந்தமாக ஸ்ரீ இராமகிருஷ்ண விஜயம் இதழ்களில் 1921 முதல் அடிகளார் எழுதிய சில கவிதைகளையும் கட்டுரைகளையும் தொகுத்து விபுலாநந்த இலக்கியத்தின் இரண்டாவது தொகுதியாக இந்நூல் வெளிவந்துள்ளது. முன்னைய நூல் விபுலானந்த அமுதம் என்ற தலைப்பில் வெளிவந்திருந்தது. விபுலாநந்தத் தேன் இரு பகுதிகளாக அமைந்துள்ளது. முதற் பகுதியில் வாழ்க்கை வரலாறு, ஈசனுவக்கும் மலர், தேவி வணக்கம், தேவ பாணி, கோயில், மலர் மாலை, மஹாலக்ஷ்மி ஸ்தோத்திரம், பெருந்தேவ பாணி, விவேகாநந்த பஞ்சகம், குரு சரண ஸ்தோத்திரம், குருதேவர் வாக்கியம் ஆகிய பத்துச் செய்யுள் வடிவ ஆக்கங்களும், இரண்டாவது பகுதியில் அடிகளார் வசன நடையில் எழுதியிருந்த விநாயகக் கடவுள், நம் நாட்டின் பெருமை, வைதிக நெறி, அழுத பிள்ளை பால் குடிக்கும், தில்லைத் திருநடனம், பழந்தமிழ் நாட்டுச் சமவாய வாழ்க்கை, வரகுணதேவர் சரித்திரம், உறக்கமும் விழிப்பும், அர்த்த நாரீசுவர வடிவம், சர்வம் சக்தி மயம், வினைப்பயன் ஆகிய 11 ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2378).

ஏனைய பதிவுகள்

11494 தங்கக் கடையல்(சிறுவர் கவிதைத் தொகுதி).

க.வீரகத்தி. கொழும்பு: வரையறுக்கப்பட்ட எம்.டி.குணசேன அன் கோ, 217 ஒல்கொட் மாவத்தை, 1வது பதிப்பு, 1971. (கொழும்பு: வரையறுக்கப்பட்ட எம்.டி.குணசேன அன் கொம்பனி அச்சகம், 217 ஒல்கொட் மாவத்தை). (4), iஎ, 92 பக்கம்,