11895 புதுமுறைச் சரித்திரம்: ஜீ.சீ.ஈ. பகுதி 2: கி.பி.1453-கி.பி.1796:அடங்கன் 2.

 ஆ.சபாரத்தினம். யாழ்ப்பாணம்: கலைவாணி புத்தக நிலையம், 1வது பதிப்பு, 1967, (யாழ்ப்பாணம்: கலைவாணி அச்சகம், இல. 10, பிரதான வீதி).

(22), 360 பக்கம், விலை: ரூபா 5.00, அளவு: 18.5×12.5 சமீ.

இந்நூல் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கையின் நிலை (அரசியல், ஆட்சி முறை, சமூகநிலை-சாதியாசாரம், சமயம், மொழி, பண்பாடு), கோட்டை அரசின் வீழ்ச்சி, சீதாவாக்கையின் தோற்றமும் மறைவும், யாழ்ப்பாண அரசின் வீழ்ச்சி, கண்டி அரசும் போர்த்துக்கேயரும், இரண்டாம் இராஜசிங்கனும் ஒல்லாந்தரும், இரு இறுதிச் சிங்கள மன்னரும் போர்த்துக்கேயரும், கண்டியில் நாயக்கர் மன்னராட்சி ஆகியவை முதலாம் பாகத்தில் விளக்கப்பட்டுள்ளன. இரண்டாம் பாகத்தில் அரசியல் நிர்வாகம், பொருளாதாரம் என்பவற்றுக்குரியதாகும். இதில் கரையோர மாகாணங்களில் போர்த்துக்கேய நிர்வாகம், டச்சு அரசியல் நிர்வாக முறை, டச்சுக்காரரின் வணிக முயற்சிகள், ஒல்லாந்தர் கால விவசாய வளர்ச்சி, கண்டி இராச்சிய நிர்வாக முறை, கண்டி இராச்சியத்தின் பொருளாதார நிலை ஆகியவை தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. மூன்றாம் பாகம், சமயம், சமூகம் தொடர்பானவை. இதில் போர்த்துக்கேயரின் சமயம் பரப்பும் முயற்சிகள், டச்சுக்காரரின் சமயம் பரப்பும் முயற்சிகள், போத்துக்கேயர் காலக் கல்வி நிலை, டச்சுக்காரர் காலக் கல்வி வளர்ச்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. அனுபந்தங்களாக றோமன் டச்சுச் சட்டம், நெதர்லாந்து கிழக்கிந்திய தீவுகளின் மகா தேசாதிபதிகள், இலங்கையிற் பதவி வகித்த ஒல்லாந்த தேசாதிபதிகள், க.பொ.த.ப. பரீட்சை வினாக்கள் (1965-66) ஆகியவை காணப்படுகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14059).

ஏனைய பதிவுகள்