S.F.D.சில்வா (மூலம்), மு.கணபதிப்பிள்ளை (தமிழாக்கம்). கொழும்பு: கொழும்பு அப்போத்திக்கரீஸ் கம்பெனி, குமார வீதி, கோட்டை, 1வது பதிப்பு, மே 1954. (கொழும்பு: கொழும்பு அப்போத்திக்கரீஸ் கம்பெனி, குமார வீதி, கோட்டை).
(8), 148 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள்;, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×14 சமீ.
ஆரம்பப் பாடசாலைகளுக்கான பூமிசாஸ்திர வாசகம். கொழும்பு அரசினர் ஆசிரிய பயிற்சிக் கழக அதிபரான S.F.D.சில்வா அவர்கள் எழுதிய இந்நூலை இலங்கைக் கல்விப்பகுதித் தமிழ்ப் பாடநுல் மொழிபெயர்ப்பாளர் திரு. மு. கணபதிப்பிள்ளை அவர்கள் தமிழாக்கம் செய்திருக்கிறார். ஈரலிப்பு மண்டல வாசிகள் (தென்னை பயிரிடுவோர், றப்பர் பயிரிடுவோர்), வரண்ட சமவெளிகளில் வசிப்போர் (நெல் விளைவிப்போர், சேனைப் பயிர்ச் செய்வோர், சந்தைக் காய்கறி பயிரிடுவோர்), மலைநாட்டுவாசிகள் (ஈரலிப்புச் சரிவு-தேயிலைத் தோட்டங்கள், வரண்ட சரிவுகள்- பத்தனைப் புல்வெளிகள்), இலங்கையின் கடற்கரைப் பகுதிகள், மக்கள் வாழுமிடங்கள், கொழும்புத் துறைமுகப் பட்டினம், இந்து சமுத்திரத்தைச் சூழ்ந்த நாடுகள் ஆகிய ஏழு பாடங்களை இந்நூல் உள்ளடக்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13357).