கலையார்வன் (இயற்பெயர்: குருசுமுத்து இராயப்பு). யாழ்ப்பாணம்: ஜெயந்த் சென்டர், 165 வேம்படி வீதி, 1வது பதிப்பு, மார்கழி 2015. (பண்டத்தரிப்பு: யே.எஸ்.பிரிண்டர்ஸ்).
xx, 420 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-0197-05-7.
பல்வேறு காரணங்களுக்காக இலங்கையிலும், எட்டு பிறநாடுகளிலும் 1979-2014 காலகட்டத்தில் பயணித்ததால் பெற்றக்கொண்ட அனுபவங்களை நூலுருவில் தந்திருக்கிறார். ஆசிரியரின் 18ஆவது நூல் இதுவாகும். இளவயதுப் பயணங்கள் (யாழ்ப்பாண அயல் தீவுகள்), திருத்தல தரிசிப்புப் பயணம் (இந்தியா), புகலிடம் தேடிய பயணம் (பிரான்ஸ்), புகலிடக் கோரிக்கைப் பயணம் (சுவிட்சர்லாந்து), சுற்றுலா, வர்த்தக, ஒய்வுக்கான பயணங்கள்(சிங்கப்பூர், மலேசியா, நோர்வே, இத்தாலி, ஐக்கிய இராச்சியம்), உறவுகளைச் சந்திக்கும் பயணங்கள் (இலங்கை), சுற்றுலா, நூறறாண்டு விழா பயணங்கள் (இந்தியா) ஆகிய ஏழு தலைப்புகளில் இப்பயணக் கட்டுரைகள் கலாபூஷணம் கு.இராயப்புவின் விரிவான பல அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 251131).