மார்க்கண்டு அருள்சந்திரன். யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணப் பெட்டகம்-நிழலுருக் கலைக்கூடம், வன்னி நம்பிக்கை நிதியம், 1வது பதிப்பு, டிசம்பர் 2016. (யாழ்ப்பாணம்: அன்ரா பிரின்டர்ஸ்).
xiv, 324 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 1500., அளவு: 24.5×17.5 சமீ., ISBN: 978-955-41403-1-8.
யாழ்ப்பாணப் பண்பாட்டுருவாக்கத்துக்கு முன்னின்றுழைத்த 650 பெருமக்களை இனங்கண்டு அவர்களை துறைசார் பிரிவுகளுக்குள் அடக்கி இவ்வாவணத்தைத் தொகுத்திருக்கிறார். அவ்வகையில் பொதுவியல், சமயமும் தத்துவமும், சமூகமும் வரலாறும், அறிவியலும் தொழில்நுட்பமும், மொழியும் இலக்கியமும், கலையும் பொழுதுபோக்கும், ஆகிய பிரிவுகளுக்குள் அனைவரையும் அடக்கி யாழ்ப்பாணத்தின் மறைந்த ஆளுமைகளை புகைப்படங்களுடன் பதிவுசெய்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட கலாசார அலுவலராகப் பணியாற்றும் மா.அருள்சந்திரன் அரங்கியல் துறையில் ஈடுபாடு கொண்டவர்.