சிவதொண்டன் சபையார். யாழ்ப்பாணம்: சிவதொண்டன் சபை, 1வது பதிப்பு, ஜுன் 1972. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், கொழும்பு: மெய்கண்டான் அச்சகம்).
பக்கம் 145-218, (4), – I-XXIV, தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ.
தமிழ் ஆங்கில மொழிகளில் எழுதப்பட்ட கட்டுரைகளைத் தாங்கிய சிவதொண்டன் மலர் 3.6.1972இல் சிவயோக சுவாமிகளின் பிறந்ததின நினைவாக, யாழ்ப்பாணத்திலிருந்து சிவதொண்டன் நிலையத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களது அதிகாரபூர்வ ஏடான சிவதொண்டன் இதழின் சிறப்பிதழாகக் கருதக்கூடிய இம்மலரில் நூற்றாண்டு வாழ்த்து, கொழும்புத்துறையடிகள், சுவாமியார் ஆற்றுப்படை, சேமமோடு வாழ்வாய், வழுத்தொணா மலரடி வாழ்த்தி வாழ்வோம், சுவாமிகளின் கதிர்காம யாத்திரை, எமது குலகுரு சிவயோக சுவாமிகள், சும்மா இரு, குரு தத்துவ விளக்கம், யோகசுவாமிகளும் அடியேனும், குருநாதன் அருள்வாசக வரலாறு, திருநெறிய தமிழ், நல்லூர் செல்லப்பாச் சுவாமிகள், யோகசுவாமிகளின் திருமுறைப் பற்று, யோகசுவாமிகளோடு என் அனுபவங்கள், திருமுறையும் நற்சிந்தனையும், திருமுறைகளின் அருள்மாட்சிக்கு அற்புதச் சான்று காட்டிய அருளாளன் எங்கள் குருநாதன், அவரவர்க்கு அதுவதுவாயிருக்கின்ற தெய்வம் (ஆசிரியர் பக்கம்), நற்சிந்தனை ஆகிய தமிழ்க்கட்டுரைகளும், ஆங்கில மொழியில் எழுதப்பட்ட ஒன்பது கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 9335).