மலர்க்குழு. மட்டக்களப்பு: இராமகிருஷ்ண குருகுலப் பழைய மாணவர் மன்றம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2012. (கொழும்பு 6: குமரன் அச்சகம், 39, 36வது ஒழுங்கை).
xiv, 330 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 25×17.5 சமீ.
இநநூலில் ஆத்மஞானி சுவாமி ஜீவனானந்தர் அவர்களின் வாழ்வும் ஆன்மீகப் பணிகளும் போற்றிப் புகழப்பட்டுள்ளன. ஆசிகளும் முகவுரையும் முதற்பகுதியிலும், ஆய்வுகளும் அனுபவப் பகிர்வுகளும் இரண்டாவது பிரிவிலும், நேர்காணல்களும் நினைவுத் தூறல்களும் மூன்றாவது பிரிவிலும் நிழற்படங்களும் நினைவுச் சின்னங்களும் நான்காவது பிரிவிலும், மாணவரில்லத்து மேலாளர்களும் மன்றத்து நிர்வாகமும் ஐந்தாவது பிரிவிலும் காணப்படுகின்றன. ஆசிகளை சுவாமி சர்வரூபானந்தர், பேரருட்திரு யோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, சுவாமி கபாலீசானந்தா, சுவாமி ஆத்மகனானந்தா, சுவாமி ஞானமயானந்தா, க.கணேசு ஆகியோர் வழங்கியுள்ளனர். சுவாமி ஜீவனானந்தர் பற்றிய ஆய்வுகளையும் அனுபவப் பகிர்வுகளையும் வெல்லவூர்க் கோபால், அன்புமணி இரா. நாகலிங்கம், கு.குணநாயகம், வு.வரகுணம், செல்வி வ.கணபதிப்பிள்ளை, க.தங்கேஸ்வரி, சி.பத்மநாதன், தேசகீர்த்தி மாசிலாமணி திருநாவுக்கரசு, பேராசிரியர் மா.செல்வராஜா, செல்வி வ.இளையதம்பி, அருள்ஞானேஸ்வரி சண்முகராஜா, இ.பாக்கியராஜன், காசுபதி நடராஜா, கந்தப்போடி விநாயகமூர்த்தி, பிரட்மன் வீரக்கோன், த.செல்வநாயகம், அல்ஹாஜ். எம்.எம்.மஹ்றூப் கரீம், பொ.சீனித்தம்பி, கு.தெட்சணாமூர்த்தி, பெ.சு.மணி, வே. கணபதிப்பிள்ளை, எஸ்.தில்லைநாதன், க.ஞானரெத்தினம், சிவானந்தம் சிறீதரன், ஆலாலசுந்தரம், எஸ்.எதிர்மன்ன சிங்கம், க.குருநாதர், கு.ஜதீஸ்குமார், யசோதை துஷ்யந்தராஜா, திலகவதி சின்னத்தம்பி, க.பாஸ்கரன், கோணாமலை கணேசபிள்ளை, தங்கவடிவேல், க.நமசிவாயம், திலகவதி ஹரிதாஸ், சிவானந்தராஜா, தெ.ரவீந்திரமூர்த்தி, அசிறி இந்துனில் அற்புதானந்தன், மாஸ்டர் சிவலிங்கம், எம்.சீவரத்தினம், நா.கணபதிப்பிள்ளை, வி.மலர்விழி, தருமரெத்தினம், அ.நல்லம்மா, எம். கணேசராஜா, க.மதிவண்ணன், பொ.கந்தையா, நே.துரைராசசிங்கம், ந.பரஞ்சோதி, த.செந்தூரன், சந்திரமதி தயாகரன், செல்வநாயகி, அ.கனகசூரியம், சோ.சிவலிங்கம், வே.யோகிதாஸ், வை.வீரசிங்கம், சுவாமி நீலமாதவானந்தாஜீ, தவதர்ஷினி சுரேஷ்குமார், இ.விஜயகுமார், எஸ்.ஏ.ஐ.மத்தியூ, தமயந்தி தவராஜா, மு.சோமசுந்தரம்பிள்ளை, கா.சிவலிங்கம் ஆகியோர் வழங்கியுள்ளனர்.