11911 சாதனையாளன் ஐ.தி.சம்பந்தன்: அகவை 80 முத்துவிழா மலர்-2016.

மலர்க்குழு. லண்டன்: சுடரொளி வெளியீட்டுக் கழகம், 15, Rutland Road, London E7 8PQ, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் அச்சகம், 39, 36வது ஒழுங்கை).

vi, 76 பக்கம், தகடுகள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ.

யாழ்ப்பாணம், காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. ஐ.தி.சம்பந்தன் அவரது சமய, இலக்கிய, வெளியீட்டு, சமூகப் பணிகளுக்கும் அப்பால், ஒரு தொழிற்சங்கவாதியாகவும், அரசியல்வாதியாகவும் அறியப்பெற்றவர். அவரது வாழ்வும் பணிகளும் பற்றிய மலரும் நினைவுகளை அவரை அறிந்த பல பிரமுகர்களும் இங்கு பதிவுசெய்துள்ளனர். அவரது 80ஆவது பிறந்த தினத்தையொட்டி வெளியிடப்பட்டுள்ள முத்துவிழா மலர் இதுவாகும். தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டம், வலுநிலையடைதலை ஊக்கப்படுத்திய தலைவர்களுள் முக்கியமானவர் இவர். கருத்தியல், அஹிம்சாவாதம், சத்தியாக்கிரகம் என சமஉரிமை நியாயத்துவத்தை தென்னிலங்கையருக்குப் புரியவைக்கத் துணிந்து போராடியவர். தொழிற்சங்கவாதி, ஆன்மீக வளர்ச்சிப் பங்காளி எனப் பொதுநலத் தொண்டராகத் தன் வாழ்வைத் தொடர்ந்தவர். மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்காகவும்  அவர்களது உரிமைக்காகவும் குரல்கொடுத்து, அவர்களுக்காகப் போராடி உறவை வலுப்படுத்த முனைந்தவர். தந்தை செல்வா, அ.அமிர்தலிங்கம், திரு திருச்செல்வம் போன்ற தலைவர்களுடன் இணைந்து இயங்கியவர். பன்முகப் பண்பாளராகத் திகழும் தமிழ்ப் பற்றாளர் என்ற பெருமைக்குரிய ஐ.தி.சம்பந்தனை கௌரவிக்கும் நோக்கில் இம்மலர் உருவாக்கப்பட்டுள்ளது. பொன். பாலசுந்தரம், சிவ.மகேசன், கனக சிவகுமாரன், வி.ஜே.போஸ், எஸ்.திருச்செல்வம் ஆகியோர் இம்மலரின் வெளியீட்டுக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

ஏனைய பதிவுகள்