11916 யுகபுருஷர் தொண்டமான்: ஒரு நிருபரின் நினைவலைகள்.

எஸ்.டி.தியாகராஜா. குண்டசாலை: கல்வி அமைச்சகம் (தமிழ்), இந்து கலாச்சார, கைத்தொழில் வர்த்தக, வாணிப, சுற்றுலாத்துறை, மத்திய மாகாணம், பல்லேகல, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2001. (கொழும்பு 13: கே.கொவிந்தராஜ், ராணி பதிப்பகம், 23, மகா வித்தியாலய மாவத்தை).

(16), 128 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 21×14 சமீ.

இலங்கை மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா மாத்தளையில் செப்டெம்பர் 15-16ஆம் திகதிகளில் நடைபெற்றவேளையில் வெளியிடப்பட்ட சிறப்புமலர். மலையத் தமிழரின் அரசியல் தலைவரான சௌமியமூர்த்தி தொண்டைமான் அவர்களின் வாழ்வும் பணிகளும் பற்றி பத்திரிகையாளர் ளு.வு.தியாகராஜா அவர்கள் தினகரன் வாரமஞ்சரியில் 35 வாரங்களாக ‘நினைத்ததை முடிப்பவன்’ என்ற தலைப்பில் எழுதிவந்த கட்டுரைத் தொடரின் நூலுருவே இதுவாகும். அமரர்  சௌமியமூர்த்தி தொண்டைமான் (ஆகஸ்டு 30, 1913 – அக்டோபர் 30, 1999) இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களது முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராவார். 86 வது வயதில் இவர் இறக்கும் போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவராகவும் இலங்கை அரசின் அமைச்சரவையில் வயது கூடிய அமைச்சராகவும் காணப்பட்டார். இவர் தொடர்ந்து 21 வருடங்கள் இலங்கை பாராளுமன்றில் அமைச்சராகப் பதவி வகித்தார். 1924 ஆம் ஆண்டு தமது 11வது அகவையில் இலங்கை வந்த தொண்டைமான், தமது 14வது வயது தொடக்கம் கம்பளை புனித அந்திரேயர் கல்லூரியில் சேர்ந்து கல்வி கற்றார். ஜூலை 24, 1939 இல் ஜவஹர்லால் நேருவின் கருத்துக்கேற்ப ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இந்திய காங்கிரசின் கம்பளைக் கிளையின் தலைவராக, ஆகஸ்ட் 13, 1939 இல் சௌமியமூர்த்தி தொண்டைமான் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1940 மே மாதம் இலங்கை இந்திய காங்கிரசின் தொழிற்சங்க கிளை ஆம்பிக்கப்பட்டது. இதன் ஆரம்ப தலைவராக சௌமியமூர்த்தி தொண்டைமான் தெரிந்தெடுக்கப்பட்டார். இந்நிகழ்வே இவரது வாழ்வின் முதலாவது பிரதான அரசியல் நிகழ்வாகும். 1945 ஆம் ஆண்டு நுவரெலியா பொதுக்குழுவில் இலங்கை இந்திய காங்கிரசினதும் அதன் தொழிற்சங்கத்தினதும் தலைவராக தெரிந்தெடுக்கப்பட்டார். 1947 இல் 95 பாராளுமன்ற அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்காக பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இலங்கை இந்திய காங்கிரஸ் எட்டு தொகுதிகளுக்கு போட்டியிட்டு ஏழு இடங்களை கைப்பற்றியது. சௌமியமூர்த்தி தொண்டைமான் நுவரெலியா தொகுதியில்  போடியிட்டு, 9386 வாக்குகள பெற்று பாராளுமன்றத்தில் இடதுசாரி கட்சிகளோடு எதிர்க்கட்சியில் அமர்ந்தார். தொண்டைமான் இலங்கையில் முக்கிய அரசியல் சக்தியாக வளரத் தொடங்கிய போது 1948 பெப்ரவரி 4 இல் இலங்கை சுதந்திரம் பெற்றது. 1952 இல் இலங்கை வாழ் இந்திய மக்களுக்கு குடியுரிமை வழங்குமாறு தொண்டைமான் பேரணியொன்றையும் சத்தியாக்கிரகம் ஒன்றையும் ஆரம்பித்தார். இப்போராட்டங்கள் காரணமாக அரசு இந்தியர்களை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க கோரியது. 850,000 பேர் குடியுரிமைக்காக விண்ணப்பித்தனர். இலங்கை இந்திய காங்கிரசினது பெயர் இலங்கை சனநாயக காங்கிரஸ் என்றும் இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிற் சங்கத்தினது பெயர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்றும் மாற்றப்பட்டது.  இலங்கை தொழிலாளர் காங்கிரசின் (இ.தொ.கா.) தலைவராக சௌமியமூர்த்தி 1955 முதல் 1999 இல் அவர் இறக்கும் வரையில்  பதவி வகித்தார். 1960 இல் தொழிலாளர் பிரதிநிதியாக சௌமியமூர்த்தியை பாராளுமன்றத்துக்கு நியமித்தார்.  1978 முதல் தொடர்ந்து 21 வருடங்கள் இலங்கை பாராளுமன்றத்தில் அமைச்சராகப் பதவி வகித்தார்.

ஏனைய பதிவுகள்

Tragamonedas Winning Wolf

Content Echa un vistazo a este enlace web: Wolf Run Número De Líneas Sobre Remuneración Propiedades Para Bonos Máquinas Tragamonedas Maquinas Tragamonedas Echtgeld Carente Lanzar