மலர் வெளியீட்டுக் குழு. மானிப்பாய்: திருமதி தம்பிப்பிள்ளை காசிநாதன், சுதுமலை தெற்கு, 1வது பதிப்பு, ஜனவரி 2017. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டேர்ஸ், இல. 424, காங்கேசன்துறை வீதி).
126 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ.
அமரர் தம்பிப்பிள்ளை காசிநாதன் (4.6.1938-22.12.2016)அவர்களின் சிவபதப்பேறு குறித்த நினைவு மலர். திருமுறைப் பாடல்களையும், அமரர் காசிநாதன் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளையும் அஞ்சலி உரைகளையும் அவரது வாழ்வின் முக்கிய நிகழ்வுகளைப் பதிவுசெய்து வைத்திருக்கும் புகைப்படங்களையும் இம்மலர் கொண்டுள்ளது. 21.01.2017இல் நிகழ்ந்த 31ம் நாள் நிகழ்வின்போது வெளியிடப்பட்டது. வட இலங்கையின் சுதுமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 1960இல் கொழும்பு கொமர்ஷியல் கம்பெனியில் இலிகிதராகப் பணியில் சேர்ந்தவர். 1965இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் பேராதனை வளாகத்தில் நிர்வாகத்துறையில் எழுதுவினைஞராகப் பணியாற்றத் தொடங்கினார். 1975இல் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாண வளாகத்திற்கு இடமாற்றம் பெற்றார். பின்னர் அங்கே உதவி நிதியாளர்(1979), உதவிப் பதிவாளர் (1980), சிரேஷ்ட உதவிப் பதிவாளர் (1985), பிரதிப் பதிவாளர் (1993) ஆகிய பதவிகளைப்பெற்று 1998இல் ஓய்வுபெற்றார். அதன் பின்னர் 2005இல் மீண்டும் மீள் நியமனம் பெற்று பிரதிப் பதிவாளராகச் சிலகாலம் பணியாற்றினார்.