11918 ரங்கராஜாங்கம்.

இ.இளங்கோவன், இ.உமாகாந்தன், என்.சிறீதேவி (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: திரு. சிவகுருநாதன் ரங்கராஜா மணிவிழாக் குழு, 1வது பதிப்பு, 2009. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

viii, 194 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.

வடமாகாண தலைமைச் செயலாளர் திரு சிவகுருநாதன் ரங்கராஜா அவர்களின் பணிவிதைப்புப் படையல். இம்மணிவிழா மலர் நான்கு பகுதிகளைக் கொண்டது. முதலாவது பகுதி திரு. சிவகுருநாதன் ரங்கராஜா ஒரு பார்வை என்ற கருப்பொருளில் அவரது வரலாற்றுக் குறிப்புகளையும் தொழில்சார் விருத்திகளையும் அவரது பணிகள் பற்றிய பார்வையினையும் வழங்குகின்றது. இரண்டாம் பகுதி விழா நாயகனின் பன்முகப்பட்ட ஆழுமையை வாழ்த்தி நல்லாசி கூறியோரின் செய்திகளைக் கொண்டதாகவுள்ளது. மூன்றாம் பகுதி ‘சுதந்திரத்துக்குப் பிற்பட்ட இலங்கையின் பன்முகப்பட்ட பார்வை’ என்ற கருப்பொருளின் கீழ் எழுதப்பெற்ற பன்முக ஆய்வுகளின் பயனுள்ள தொகுப்பாக அமைந்துள்ளது. இப்பிரிவில்  நவீன முகாமைத்துவமும் நவீன நிர்வாகமும் ஆசிரியர்களின் வகிபாகமும் (மா.நடராசசுந்தரம்), சுதந்திரத்திற்குப் பின்னர் நிகழ்ந்த கல்வியின் படிமலர்ச்சி பரிமாணங்கள் (சபா.ஜெயராசா), இலங்கைப் பொருளாதார வளர்ச்சிப் போக்கும் வறுமையும் (வி.பி.சிவநாதன்), அறிவுசார் பொருளாதார முறைகளை அளவிடல்(சோ.சந்திரசேகரம்), இலங்கையில் அரச கரும மொழியாகத் தமிழ் (அ.சண்முகதாஸ்), சுதந்திரத்தின் பின்னர் இலங்கையின் குடித்தொகைப் பண்புகளில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் (கா.குகபாலன்), இலங்கையில் விவசாய நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் (இரா.சிவச்சந்திரன்), இலங்கையில் தேசக் கட்டுமானமும் வரலாற்று ஐதீகங்களும் (ச.சத்தியசீலன்), கடந்த ஆறு தசாப்த இலங்கைத் தமிழ்ப் புனைகதைகளின் இலக்கிய நேர்த்தி (க.குணராசா), இலங்கையில் சுதந்திரத்திற்குப் பின் மொழியும் வாழ்வும்: ஓர் இலக்கியக் கண்ணோட்டம் (மனோன்மணி சண்முகதாஸ்), சுதந்திரத்துக்குப் பின்னர் ஈழத்து நவீன கவிதை வளர்ச்சி (செ.யோகராசா), சுதந்திரத்திற்குப் பின் இலங்கைப் பெண்கள் (எம்.எஸ்.தேவகௌரி) ஆகிய பன்னிரு ஆய்வுக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. நான்காம் பகுதி திரு. சி.ரங்கராஜா அவர்களது ஆய்வேடுகளினதும் ஆன்மீகப் பார்வையையும் சுட்டும்வகையில் அமைந்த கட்டுரைகளையும் கொண்டுள்ளது. அன்றாட வாழ்வில் ஆன்மீகம், மாற்றத்தை முகாமை செய்தல், Challenges of Rehabilitation and development in the North East, Poverty related Issues in the North East Provinces ஆகிய நான்கு ஆக்கங்கள் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

40 Line Harbors

Blogs Mr bet casino free spins | Online game Have Monopoly People Instruct Position Casino games On the Large Effective Likelihood: Enjoy This type of