மலர் வெளியீட்டுக் குழு. லண்டன்: ஸ்லீ வெளியீடு, Whitton Avenue West, Greenford, Middlesex, UB6 0DZ, 1வது பதிப்பு, மே 2012. (லண்டன்: அச்சக விபரம் தரப்படவில்லை).
(4), 147 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.
வல்வெட்டித்துறை வேம்படியைப் பிறப்பிடமாகவும் இலண்டன் மிச்சத்தை வதிவிடமாகவும் கொண்ட திரு பாலசுப்பிரமணியம் சிவஞானதாஸ் (பைலற் ஞானம் (28.12.1966-29.04.2012) அவர்கள் 29.04.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அவரது 31ஆம்நாள் நினைவாக வெளியிடப்பட்ட நினைவஞ்சலி மலர் இது. பைலற் ஞானம் ஈழவிடுதலைப் போராட்டக் காலத்தில் இயக்கங்களின் போராளிகளை இடம் நகர்த்துவதிலும், தமிழகப் படகுப் பயணங்களுக்கு வழிகாட்டியாகவும் செயற்பட்டவர். இதன் காரணமாகவே விடுதலைப் போராளியான கப்டன் பண்டிதர் இவருக்கு ‘பைலற்’ என்ற அடைமொழியை வழங்கினார். பின்னாளில் பைலற் ஞானம் என்பது இவரது இயற்பெயராகவே நிலைத்துவிட்டது. இம்மலர், அன்னாரின் பொது வாழ்வு, குடும்பவாழ்வு என்பன பற்றிய பல்வேறு பிரமுகர்களினதும் மலரும் நினைவுகளைப் பதிவுசெய்கின்றது.