வி.ரி.சகாதேவராஜா (மலராசிரியர்). காரைதீவு (கி.மா): சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்தப் பணிமன்றம், 1வது பதிப்பு, ஜுன் 1999. (சாய்ந்தமருது 14: ஸ்டார் ஓப்செட் பிரின்டர்ஸ், 502, பிரதான சாலை).
xx, 112 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26.5×20.5 சமீ.
சுவாமி விபுலாநந்த அடிகளாருக்கு அவர் பிறந்த ஊரில் ஒரு நினைவாலயம் அமைத்து அதனைத் திறந்துவைத்த வேளை 26.6.1999 அன்று வெளியிடப்பட்ட மலர். மலர் முழுவதும் சுவாமி விபுலாநந்தரின் வாழ்வும் பணியும் பற்றிய பல்வேறு தமிழிஞர்களின் படைப்புக்கள் தொகுக்கப் பெற்றுள்ளன. விபுலாநந்த அடிகளாரின் சிந்தனையும் செயற்பாடும், முஸ்லிம் நேசர் சுவாமி விபுலாநந்தர், விபுலாநந்த மணிமாலை, மதங்கசூளாமணியும் சுவாமி விபுலாநந்தரும், ஆனைப்பந்தியில் விபுலாநந்தர், சுவாமியுடனான சுகானுபவங்கள், கிழக்கு வானில் மற்றொரு விடிவெள்ளி ஸ்ரீமத் சுவாமி நடராஜானந்தஜீ, வித்துவான் வெள்ளைவாரணனார் காட்டிய விபுலாநந்தர், முத்தமிழ் முனிவரின் ஒப்பியல் நோக்கு, தமிழியல் ஆய்வுக்கு விபுலாநந்த அடிகளாரின் பங்களிப்பு என இன்னோரன்ன கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18348).