மலர்க்குழு. கல்முனை: இராமகிருஷ்ண மகாவித்தியாலயம், 1வது பதிப்பு, 1992. (மட்டக்களப்பு: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்).
(14), 74 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ.
பிரமுகர்களின் ஆசிச் செய்தியுடனும் விபுலாநந்தரின் வாழ்வையும் அவர்தம் பணிகளையும் விதந்துரைக்கும் பல கட்டுரைகளையும் தாங்கி வெளிவந்துள்ள சிறப்பு மலர் இது. விபுலாநந்த அடிகளாரின் கல்வித் தொண்டு (புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை), மிக்க மணம்பெற மிளிர்க நன்மலரே (த.கனகரெத்தினம்), நாமும் இராமகிருஷ்ண சங்கமும்-ஒரு கண்ணோட்டம் (கே.தியாகராஜா), விபுலாநந்த அடிகளாரும் அவர்கள் காட்டிய வாழ்க்கை நெறியும் (வே.தட்சணாமூர்த்தி), சுவாமி விபுலாநந்தரும் யாழ்ப்பாணத் தொடர்பும் (கு.சோமசுந்தரம்), முத்தமிழ் வித்தகமுனி விபுலாநந்தன் (அக்கரை மாணிக்கம்), சுவாமி விபுலாநந்தரும் அவர்தம் பணிகளும் (எஸ்.பொன்னுத்துரை), சுவாமி விபுலாநந்தரின் உரைநடை (பண்டிதர் வி.ரி.செல்லத்துரை), வித்தகனைத் துதிப்போம் (கே.தயானந்தன்), விபுலாநந்தர் எனும் விடிவெள்ளி (சு.சுதேஸ்வரி), கல்முனை இராமகிருஷ்ண வித்தியாலயம் ஒரு கண்ணேட்டம் (பெ.விஜயரெத்தினம்), கல்முனையில் கலாசாலை (சபா.நாகராஜன்), ஆல்போல் பரந்து அனைவருக்கும் உதவிய கல்முனை ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயம் (க.கந்தவனப்பிள்ளை), விழாச் செயலாளரின் செய்தி (எஸ்.பரமநாதன்). ஆகிய கட்டுரைகள் மலரை அலங்கரிக்கின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 22026).