11930 ஸ்ரீமத் சுவாமி விபுலானந்த ஜீ.

F.X.C.நடராசா, சாம்பசிவம் தவமணிதேவி, த.செல்வநாயகம். மட்டக்களப்பு: மகாவித்துவான் இல்லம், 127, மத்திய வீதி, 1வது பதிப்பு, சித்திரை 1992. (மட்டக்களப்பு: புனித வளனார் கத்தோலிக்க அச்சகம்).

vi, 18 பக்கம், விலை: ரூபா 25., அளவு: 25×17.5 சமீ.

ஸ்ரீமத் சுவாமி விபுலானந்தரின் வாழ்வையும் பணிகளையும் சுருங்கச் சொல்லும் ஒரு நூல். சமர்ப்பணம், என் உரை (F.X.C.நடராசா), ஆசியுரை (சுவாமி ஆத்மகனாநந்தா),அணிந்துரை (சுவாமி ஜீவானந்த மகராஜ்), துறவு நிலை, பண்டிதரை ஆட்கொண்ட அடிகளார், மதங்க சூளாமணி – 1926, யாழ் நூல், பேராசிரியர் – தமிழ்த் துறைத்தலைவர், அண்ணாமலை இலங்கை பல்கலைக்கழகங்கள், குணங்கள் இயல்புகள் தன்மைகள், விபுலானந்த சுவாமி துறவு வாழ்க்கை வரலாறு,  உயர்திரு விபுலானந்த அடிகளாருக்கு: நீலமண்டல ஆசிரியப்பா, நூலாசிரியர்கள் மூவரைப் பற்றி – F.X.C நடராசா ஆகிய உள்ளடக்கங்களைக் கொண்டதாக இந்த நூல் அமைந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13261).

ஏனைய பதிவுகள்

11460 முகாமைத்துவத்திற்கு ஓர் அறிமுகம்.

க.ரகுராகவன். மட்டக்களப்பு: யுனைட்டெட் வெளியீடு, வர்த்தக முகாமைத்துவ பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம், செங்கலடி, 1வது பதிப்பு, டிசம்பர் 1995. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி). (12), 164 பக்கம்,